சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
கருணா குழுவினர் பற்றிய பல இரகசியத் தகவல்கள் அம்பலம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

thumb_karunaதென்தமிழீழத்தில் கருணாவின் வழி நடத்தலில் சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா இராணுவ புலனாய்வு ஆயுதாரிகளிடம் இருந்து தப்பியோடி விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த இருவர் ஊடகவியலாளரைச் சந்தித்து பல முக்கிய திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

மட்டக்களப்பு கரடியனாறு தேனகம் விடுதியில் இன்று முற்பகல் 11மணி தொடக்கம் 12.30 மணிவரை நடந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இருவரும் இத்தகவல்களை 23 அகவையுடைய புகழ்வேந்தன், 26 அகவையுடைய ஞானதீபன் ஆகியோர் கருணாவின் செயற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

கருணா இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் தென்தமிழீழத்தில் ஒட்டுப்படையிரை வழிநடத்தும் பொறுப்பு பிள்ளையான் விடப்பட்டுள்ளதாகவும் இவரே ஒட்டுப்படையினரை வழிநடத்தி வருவதாகவும் இவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

பொலநறுவை வெலிக்கந்தை தீவுச்சேனையிலும் மட்டக்களப்பு திருகோணமலைப் பகுதிகளிலும் முகாம் அமைத்து வரும் கருணா குழுவினருடன் சிறீலங்கா அமைச்சரான மைத்திரிபால சிறீசேன, அதாவுல்லா,டக்கிளஸ் தேவானந்தா ஆகியோர் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர் மைத்திரிபாலவும் , அத்தாவுல்லாவும் சிறீலங்காவின் பவளக் கசவ வாகனங்களில் கருணாவின் ஆயுத தாரிகளை பல தடவைகள் சந்தித்துள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டக்கிளஸ் தேவானந்தா அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு வெளிநாடு ஒன்று நிதிஉதவி வழங்கி வருவதாகவும் ஆயுததாரிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குபவராக உருத்திரா என்பவரும் சிறீலங்கா படைப் புலனாய்வு பிரிவினருடனான தொடர்பாளர்களாக கப்டன் சிறீஸ்குமார, அபயரட்ண ஆகியோர் இயங்கி வந்ததாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டுபற்றாளர் நடேசனை இனியபாரதியே சுட்டுக்கொன்றதாகவும் அண்மைக்காலமாக அம்பாறை மாந்தோட்டப் பகுதியில் இரகசிய மறைவிடத்தில் தங்கியிருந்ததாகவும் இதற்கு சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பவே புத்த பிக்கு ஒருவரின் உதவியுடன் பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடத்திலிருந்தே அக்கரைப்பற்று ஜும்மா பள்ளவாசல் தாக்குதல் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களின் மீதான படுகொலைகளை இனியபாரதி தலைமையிலான குழுவினரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும்அமைச்சர் அத்தவுல்லாவின் பின்புலத்திலேயே அக்கரைப்பற்று பள்ளிவாசல் படுகொலைகளை சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவரே செய்துள்ளனர் என்பதையும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். 

Comments (0)Add Comment

Write comment
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley

busy
 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.