|
உலகவிடுதலைப் போர்களுக்கு வியட்னாம் கியூபா சிறந்த உதாரணங்கள். வியட்னாம் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் இறுதியில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருடன் தப்பியோடியது, வரலாறு.
இதே போல் கியூபா விடுதலைப்போரில் காட்டிக்கொடுத்தவர்கள் இன்றுவரை புளோரிடா அகதிகள் தமிழீழ விடுதலைப்போரில் காட்டிக்கொடுப்போர் கதை தொடர்கிறது, எதிரியும், ஆக்கிரமிப்பு சக்திகளும் காட்டிக்கொடுப்போரை பாதுகாத்து வருவது அவர்களின் தேவையாகும்.
ஆச்சரியப்படும் வகையில் தமிழீழ விடுதலைப்போரில் காட்டிக்கொடுக்கும் ஒட்டுக்குழுத் தலைவர்கள் அமைச்சர்களாகவும், எம்பிக்களாகவும் இருப்பது கவலைக்குரிது. இவர்கள் மானம் கெட்டவர்களாய் தன்னிலை மறந்து சிங்கள் தேசத்தை எமது தேசம், அழகான தேசம் என வர்ணிப்பது பரிதாபம்.
இப்படியாக காட்டிக்கொடுப்பவர்கள் சகல நாடுகளிலும் இருந்து தான் உள்ளனர். உலகப் போர்களில் கூட தருமம், நியாயங்களுக்கு அப்பால் நாசிகளுடன் சேர்ந்து நின்ற பிரிப்பினை வாதிகள் இருந்துள்ளனர் ஆனாலும் இவர்களிற்கு வரலாறு இல்லை நாடுகள் உருவான கதையை படிக்கும்போது இவர்கள் இடையில் சிறு சம்பவங்களாக உள்ளனர்.
தமது கொள்கைகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது காட்டிக்கொடுப்பவர்களின் இயல்பு எதிரியினதும் ஆக்கிரமிப்பாளர்களின்தும் விருப்பம் எதுவோ அதுவே இவர்களினதும்.
தமிழீழ விடுதலைப்போர் ஆரம்பித்து இன்றுவரை பல படிகளை தாண்டி நிற்றும் நிலையில் சிங்கள அரசுகள் தமது ஆரம்ப நிலையில்இருந்து மாறாமல் நிற்பதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்த காட்டிக்கொடுப்பவர்களே.
பலம்பொருந்திய புலிகளின் வேண்டுகோள்களையே மறுத்து மாவட்ட அதிகாரப்பகிர்வு தீர்வான முன்வைக்குமளவிற்கு பக்கபலமாக நிற்பவர்கள் காட்டிக்கொடுப்பவர்களே இந்நிலையில் இந்த ஒட்டுக்குழுக்கள் சுலோகத்தை மட்டும் தமது பகட்டு வாழ்விற்காக கூறி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?
சிங்களவர் ஒருவரின் குரலாக அல்லாமல் தமிழர் ஒருவரின் குரலாகவே குறைந்த பட்ச தீர்வு யோசனைகள் முன்வைக்கப்படுகின்ற நிலைமை ஆகிவிட்டது தமிழ் வாழ்வு
இது தமிழருக்கு வந்த சாபக்கேடு
காட்டிக்கொடுத்தவர்கள் புலிகள் பாசிச புலிகள் எனவும், சகோதரப் படுகொலை செய்தவர்கள் எனவும் கூறுகின்றார்கள் பிடல் காஸ்ரோவையும் சேகுவேராவையும் கோசிமின்னையும் பாசிசத்தலைவர்கள் என யாராவது அழைக்கிறார்களா?
ஏன் இவை நடந்தது? உறுதி இல்லாத தலைமைகளும், குழுவாதச்சிந்தனைகளும், துணிச்சலற்ற முடிவுகளும், தவறான வழிகாட்டல்களுமே இதற்கு காரணம்.
புலிகள் மாற்றுக்கருத்துடையவர்களை எதிர்த்து நின்றதாகக் கூறும் இவர்கள் உறுதியாகப் புலிகளை எதிர்த்து நிற்கக்கூடிய திராணி இருக்கவில்லை. ஓடிப்போய் எதிரியுடனும் ஆக்கிரமிப்பாளருடன் சேர்ந்தது, காட்டிக்கொடுத்தது என்பதை விட வேறெதுவும் இல்லை.
காட்டிக்கொடுப்பதற்கும் வரைவிலக்கணம் கூறவேண்டியுள்ளது. அழிவுகள், கொலைகள் எல்லாம் எதனால் இடம்பெறுகின்றது? காட்டிக்கொடுப்பால் இன்று வாழ்வே காட்டிக்;கொடுப்பாக மாறி அது ஒரு வியாதி என்ற நிலையில், இவர்களின் துணையுடன் எதிர் சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.
காட்டிக்கொடுப்பாளர்களையே மோதவிட்டு எதிரி வேடிக்கை பார்க்கின்றான்
இறுதியில் முற்றாக அழிந்து போகப்போகிறார்கள்.
இவர்கள்போன்று காட்டிக்கொடுத்து அழிவதைவிட புலிகள் போராடி அழிந்தார்கள் என்பதும் வரலாறாக அமையட்டும்
மக்கள் பேரவைக்குழு – கொழும்பு
|