|
கருணாவின் முடிவு தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பெரும் அதிருத்தியைக் கொடுத்ததோடு இல்லாமல் பெரும் ஆதிரத்திரத்தையும் ஏற்படுத்தியது. கருணாவின் இத்தகைய நடவடிக்கையை காரணமாக கருணாவைக் கொல்லவேண்டும் எனவும் பலர் துடித்தனர். கருணா தனது விசுவாசிகள் மூலம் போடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்குகள் கருணா உயிர் பிழைக்க வைத்தது.
சில மூத்த போராளிகளால் கருணாவுக்கு அறிவுரை வழங்கப்பட்ட போதும் கருணா அவற்றைக் செவிசாய்க்கவில்லை. மூத்த போராளிகளை தனது பக்கம் இழுப்பதிலேயே கருணா முழுக் கவனத்தையும் செலுத்தினார்.
இதற்குள் கருணாவினால் சில பொறுப்பாளர்களையும் தளபதிகளையும் அழைத்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கினார். தளபதிகளின் மாற்றம் கோட்டப் பொறுப்பாளர்களில் மாற்றும், அரசியல் நடவடிக்கையில் மாற்றம் என அனைத்தையும் கருணா துரிதகதியில் அமுல்படுத்தினார்.
இந்த மாற்றங்கள் பொறுப்பாளர்கள், தளதிபதிகள், போராளிகள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்பத்தியதோடு கருணா மீது இருந்த வெறுப்பை மேலும் பன்மடங்காக்கியது.
இங்கு ஏதோ விபரீதம் நடைபெறப் போகின்றது என ஊகித்த பொறுப்பாளர்கள், தளபதிகள் தாங்களாகவே முடிவுகளை எடுத்துக்கொண்டு கருணாவின் பிடியிலிருந்து தமது உயிரைப் பாதுகாத்துக்கொண்டு தப்பிக்கத் தொடங்கினார்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசியத்தை நேசித்த தளபதிகள், பொறுப்பாளர்கள் சிலர் குறிப்பிட்ட சில நாட்களில் வன்னி நிலப்பரப்பை வந்தடைந்தனர். (தொடரும்)
|