சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எம்மைப்பற்றி... அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
முக்கிய அறிவித்தல்: இவ்விணையத்தளமானது முன்னர் (ஜனவரி 2007க்கு முதல்) வேறு சிலரால் நடாத்தப்பட்டு வந்தது. பின்னர் அவர்கள் இந்த முகவரியை கைவிட்டுவிட்டனர். எனவே முன்னர் நிர்வகித்தவர்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

அனைவருக்கும் வணக்கம்!

பின்வரும் பத்திகளில் எமது இணையத்தளம் தொடர்பாக அறிமுகம் மற்றும் ஏனைய விடயங்களை தர முயற்சி செய்கின்றோம்.

அறிமுகம் - குறிக்கோள்


கடந்த முப்பது வருடங்களாக தமிழீழ தமிழர்களாகிய நாம் எமது தாயக பூமியில் தலைநிமிர்ந்து, விடுதலைப்பெற்று வாழ்வதற்காக பல வழிகளில் போராடி வருவது உலகறிந்த விடயம். தமிழீழ விடுதலைப் போராட்டமானது எதிரிகளின் பல சவால்களை முறியடித்து, வெற்றிபெற்று இன்று எம்மை நாமே சுயநிர்ணயம் செய்யும் அளவிற்கு வளர்ந்திருப்பது நிதர்சனமான உண்மை. எதியை நேரே பார்த்து இனங்கண்டுகொள்ளலாம்.அது மிக இலகுவும் கூட.

 

எனினும் எம்மினத்துள்ளேயே எமது போராட்டத்தை விலைபேசவும், போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் உயிர்த்தியாகங்களையும - அர்ப்பணிப்புக்களையும் இழிவுபடுத்தும் தமிழினத் துரோகிகளை அவ்வளவு எளிதாக இனம் கண்டுகொள்ள முடியாது. அவர்கள் எம்முடனேயே எமக்குள்ளேயே இருந்து, எம்முடனேயே படுத்து உறங்கி, எம்மையே காட்டிக்கொடுப்பவர்கள். இவர்களின் துரோகத்தனத்தால் எமது போராட்டம் பல பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றது என்றால், மறுப்பதற்கில்லை.


இவ்வாறான துரோகிகள் தாயகத்திலும் சரி, புலத்திலும் சரி இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை இனங்காட்டி எமது தமிழீழ மக்களை விழிப்படைய செய்வதுதான் எமது இணையத்தளத்தினதும், இவ் இவ்விணையத்தள நிர்வாகிகளாகிய எமதும் ஒரே நோக்கு! ஓரே குறிக்கோள்!

ஆக்கங்கள்


இவ்விணையத்தளத்தில் வெளிவருகின்ற அனைத்து விடயங்களும் எமது மின்னஞ்சலுாடாக உங்களைப்போன்று தாயக விடுதலையை நேசிப்பவர்களால் அனுப்பப்பட்டவை. நீங்களும் உங்கள் நாடுகளில் உள்ள எட்டப்பர்கள் பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம். அவற்றையும் பிரசுரிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.

நம்பகத்தன்மை அல்லது ஆதாரம்


எமது தளத்தில் வெளிவருகின்ற விடயங்கள் அனைத்தினதும் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரத் தகவல்களை உறுதி செய்த பின்னர்தான் நாம் வெளியிட்டு வருகின்றோம். இருப்பினும் தவறுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் சில இருக்கத்தான் செய்யும். அவ்வாறான தவறுகள் இருப்பின் தயவுசெய்து அவற்றை உடனுக்குடன் சுட்டிக்காட்டி உதவிசெய்யுமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்.

"விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி"

நன்றி

நிர்வாகம்
எட்டப்பர் இணையத்தளம்

மேலதிக விபரங்களுக்கு:
info(at)eddappar.com
(Please remember to replace (at) with @ symbol.

 

 

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.