சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 16 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

ஜோயின் போரியல் தந்திரங்களும் அதிரடி தாக்ககுதல்களும்.

வந்தாறுமுலை புகையிதர பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினர் மீது பதுங்கி தாக்குதலை தானே நேரடியாக களத்தில் நின்று தலைமை தாங்கி நடாத்தி பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரைக் கொன்று ஆயுத தளபாடங்களும் கைப்பற்றினான். இதில் போராளிகளுக்கு எவ்வித இழப்புகளும் ஏற்பட வில்லை.அதை தொடர்ந்து சித்தான்டி காவல்துறை நிலையத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

முறக்கொட்டான்சேனை இராணுவமுகாமுக்கும் மாவடிவெம்பு இராணுவமுகாமுக்கும் இடையேதான் சித்தான்டி காவல்துறை நிலையமும் அமைந்திருந்தது. அந்த சிங்கள காவல்துறை நிலையம் மீது தாக்குதல் நடத்தும் போது முறக்கொட்டான்சேனை, மாவடிவெம்பு ஆகிய இரு இராணுவமுகாம்களிருந்தும் உதவிக்கு இராணுவத்தினரை வரவிடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி மிக வெற்றிகரமாக அவர்களை சிதறடித்துத்கொன்று ஆயுத தளபாடங்களும் கைப்பற்றப்பட்டன.

 

இதில் காவல்துறை நிலையம் தகர்கப்பட்டு பல காவல்துறையினரும் கொல்லப்பட்;டு ஆயுததளபாடங்களும் கைப்பற்றபட்ட இந்த அதிரடி தாக்குதலை லெப்.கேணல் ஜோய் வெற்றிகரமாக நடத்தி காட்டினான். இத்தாக்குதலானது மக்கள் மத்தியில் பெரிதும் போசபட்டது மட்டுமல்ல சக போராளிகள் எல்லோரிடமும் இவனது மதிப்பு உயர்ந்தது.

 

லெப்.கேணல் விக்டர் மன்னாரில் அடம்பனில் தாக்குதலில் கைதாக்கிய இராணுவ லெப்டினட் தர அதிகாரியை யாழ் கோட்டையில் கைது பரிமாறி அதே இராணுவ அதிகாரியை கப்டன் தரத்தில் மட்டக்களப்பில் கொன்றான் ஜோய்! இச்செய்தியானது பல நாளிதழ்களில் அந்நாட்களில் வெளிவந்தியிருந்தது.

ஜோயின் இவ்வகையான தாக்குதல் முறைகளையும் அதன் வெற்றிகளையும் சகிக்க முடியதாத கருணா நெஞ்சியில் வஞ்சனையுடனும் உதட்டியில் புன்னகையுடனும் வரவேற்றான். ஜோயின் திறமையை கருணா வஞ்சகத்துடன் பாராட்டினான். அதுமட்டுமல்ல மற்றைய போராளிகளும் உன்னை பாராட்டினார்கள் அவர்களுக்கும் ஒரு தாக்குதலுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அத்தாக்குதலை வெற்றிகரமாக முடிப்போம் என்றும் அதற்கு உனது ஒத்துழைப்புத்தேவை! நீ தாக்குல் நடக்கும் இடத்திருந்து கொஞ்சம் தொலைவிலிருந்து கவனித்து கொண்டியிருந்தால் போதும் உதவி தேவைப்படும் போது உன்னை அழைக்கின்றேன் என்று கருணா கூறினான்.

அதன்படி கள்ளிச்சைவடமுனை வெலிக்கந்தை வீதியல் இராணுத்தினருக்கெதிராக தாக்குதல் கருணாவால் திட்டமிடப்பட்டது. அதன்படியே அத்தாக்குதலை கருணாவின் விசுவாசியாகயிருந்து பின் கருணாவாலே மரணதண்டனை விதிக்கப்பட்ட சந்திவெளி மதி தலைமையேற்று அத்தாக்குல் ஆரம்பமானது. இராணுவத்தின் எதிர்தாக்குதலை ஈடுகொடுக்க எம்மால் முடியாது எனவே பின்வாங்க போகின்றேன் என்று மதி கருணாவிடம் தொலைதொடர்பு சாதனம் முலம் தொர்பு கொண்டு கேட்டான்.

அதேநேரம் கருணாவால் கூறப்பட்ட அதே இடத்திலிருந்து கொண்டே ஜோய் இச்சன்டையை ஊர்ந்து அவதானித்துக் கொண்டியிருந்தான். ஆனால் இதில் என்ன வேடிக்கையான செயல் என்றால்..

இச்சன்டைக்கு தலைமை வகித்த மதி சகபோராளிகளை சன்டைக்களத்தில் விட்டு விட்டு தானுமும் அதே இடத்தில் நிற்பதாக கூறிக்கொண்டு தான் வெகு தொலை விலிருந்து கொண்டே தெலைத்தொடர்பு சாதனத்தில் கட்டளையிட்டுக்கொண்டிருந்தான்.


தொடரும்...

 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.