சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 15 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

வஞ்சகன் கருணாவால் வஞ்சிக்கப்பட்ட லெப். கேணல் ஜோய்

யார் இந்த ஜோய்?
மட்டு கொம்மாதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவன் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தான்.

குடும்ப சூழ்நிலை காரணமாக இவனுக்கு பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போய்விட்டது. தனது குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய நிற்பந்தத்திற்குள்ளானான்.


இருப்பினும் இன விடுதலையால் இவனுக்கு ஏற்பட்ட ஈடுபாடால் இவனை 1987 ம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு முழு நேரப் போராளியாக இணைய வைத்தது.

அந்த நாட்களில் தான் IPKF என்று தம்மைக் கூறிக் கொண்டு ஒரு ஆக்கிரமிப்பு படை அயல் நாட்டிலிருந்து தமிழிழத்திற்குள் புகுந்தது. இந்தப் படைக்கெதிரான கெரில்லாத்தாக்குதல்களில் பங்குகொண்டான்.

இந்த நேரத்தில் அமைப்பின் தேவை கருதி பல போராளிகள் வன்னிக்கு அனுப்பப்பட்டனர்.

அதில் மேஜர் சுகு, கப்டன் நிவாஸ் போன்றவாகளுடன் லெப்.கேணல் ஜோய்யும் சென்று அங்கு தேசியத் தலைவர் அவர்களின் நேரடிப் பார்வையில் இயக்கப்பணியில் ஈடுபட்டான்.

IPKF க்கு எதிரான அதிரடி தாக்குதல்களை முல்லைத்தீவிலும் பிற பகுதிகளிலும் நடந்த தாக்குதலிலும்; ஜோய்யின் பங்கு அளப்பெரியது. அத்துடன் ஜோய் RPG  உந்துகனையை குறிதவறாது தாக்குவதில் வல்லமையானவன.

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் தேசியத் தலைவரை தேடி இந்தியப் படையினர் முழுஅளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அதிவிசேட படையணிகளான குர்க்காஸ், பரா அணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.

இதில் குர்க்காஸ் படையினர் பற்றி கூற வேண்டியதில்லை என நினைக்கிறேன். இவர்கள் உறையில் இருந்து கத்தியை எடுத்தால் எதிரி மீது எறியாமல் திரும்ப உறையினுள் வைக்கமாட்டார்கள் என்று பேசப்பட்டவர்கள். இந்திய பாக்கிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் பங்களித்திருந்தனர். முல்லைத்தீவுக் காட்டுப்பகுதியில் நடந்த தாக்குலில் குர்க்காஸ் படையணி அவர்களது தளபதியான கேணல்பஸ்தியான் என்பவுனையும் இழந்து நின்றது. இந்த பெரிய தாக்குதல்களில் பெற்ற வெற்றிக்கு ஜோய்யின் பங்கும் பெரிதும் உண்டு.

இந்தியப்படை வெளியேற்றத்திற்கு பின்பு யாழ் கோட்டை உட்பட பல தாக்குதல்களில் ஜோய் பங்கு கொண்டான். இந்த தாக்குல் நடவடிக்கையொன்றில் மிகத்திறமையாக போராடி விழுப்புண் அடைந்தான். இவனது இப்படியான திறமைகளால்; பின்னாலில் இவன் தலைவரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டான்.

இது இவ்வாறிருக்க IPKF யினால்; உருவாக்கப்பட்ட தமிழ் தேசத்துரோகிகளை தாக்கி அழித்த பெருமைக்கரியவன் மேஜர் அன்ரனி;யே சேரும் அன்ரனி மீது போராளிகளுக்கும் மக்களுக்கும் இருந்த நன்மதிபையும் புகழையும் சகிகிக்க முடியாத கருணா அபாண்டமான பல குற்றச்சாட்டுகளை சுமத்தி கிழக்கு மாகாணப் பகுதியை விட்டே இடமாற்றம் செய்தது பற்றி நான் முன்பு அன்ரனி பற்றி எழுதிய தொடரில் கூறியுள்ளேன்.

இரண்டாவது ஈழப் போர் மட்டக்களப்பில் ஆரம்பமானது. மட்டக்கப்பில் நடத்தப்பட்ட பெரும் தாக்குதல்கள் வெற்றியின்றி; போராளிகளின் பெரும் இழப்புகளை சந்தித்தது. இதை அடுத்து நகரபகுதிகளை விட்டு இயக்க போராளிகள் காட்டுபகுதிகளுக்கு பின்வாங்கினார்கள்.இராணுவத்திற்கு எதிரான தாக்குல்களும் குறைந்திருந்தன அன்ரனி இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என இயக்க போராளிகள் மத்தியில் பரவலாக போசப்பட்து. முதல் தொடரில் ஜெயா பற்றியும் அவர் மட்டக்களப்பு நிலைமை பற்றியும் தலைமைக்கு கூறியது பற்றியும் கூறிப்பிட்டியிந்தேன். இந்த நேரத்தில் தான் மட்டக்களப்பு நிர்வாக கட்டமைப்பை ஒழுங்கு படுத்த வேண்டிய நிலையிருப்தாகதலைமை உணர்ந்து கொண்டது இதற்குத் தகுந்தவனாக ஜோய் தலைவரால் தெரிவு செய்யப்பட்டு ஜோய் மட்டக்களப்பிற்கு இராணுவ நடவடிக்கைளை சீர்செய்வற்காக அனுப்பப்பட்டான்.

ஆனால் ஜோய் அங்கு சென்றதும் அவனுக்கு எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் யார் என்பது நான் கூறாமலே புரிந்திருக்கும். ஆம் அந்த வஞ்சகன் தான் கருணா. வந்தாறுமுலை முயில்வெட்டுவான் காட்டுப்பகுதியில் இருந்த VM என்று அழைக்கப்படும் முகாமை ஜோய் பொறுப்பேற்றான்.

இந்த VM முகாம் பற்றி உங்களிடம் ஒருகணம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த VM முகாம் தான் மட்டு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முதலாவது முகாமாகும். அதுமட்டுமல்ல மட்டு அம்பாறை மாவட்டங்களின் முதல் பயிற்சி முகாமும் ஆகும்.

இந்த முகாம் 1984 ல் ஆரம்பிக்கப்பட்டது. இதை ஆரம்பித்த போராளிகளுள் தமிழ் ஈழ விடுதலைபுலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லெப். பரமதேவாவும் கூறிப்பிடத்தக்வர். ஆவரின் மறைவின் பின் இந்த முகாமை பெறுறே;ற மட்டு அம்பாறை தளபதியாக இருந்த அருணா முதலாவது பயிற்சி பாசறையை ஈராக்குளம் மதுரையடியில் ஆரம்பித்து நடாத்தினார்;.

இங்கு இருந்தவர்களில் அநேகமானவர்கள் மாவீரர் ஆகிவிட்டனர். குறிப்பாக லெப். கேணல். குமரப்பா, கப்டன் பரான்சிஸ், கப்டன் முத்தர் கப்டன் டேவிட், போன்றவாகள் ஆகும். தற்பொழுது அந்த கனவுகளைத்தாங்கி சுமந்து இருப்பவாகள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான், மட்டு அம்பாறை நீதி நிர்வாகப் பொறுப்பாளர் யோகன் பாதா,; பசீர்காக்கா, தற்போதைய திருமலை கட்டளைத் தளபதி கேணல் சொர்ணம் அமைப்பை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடோன்றில் வசித்து வரும் காந்தன் போன் றவர்களாகும்;. மேலும் இந்த முகாமிலிருந்துதான் எதிரி மீது 1984ல் களுவாஞ்சிக்குடி பொலீஸ் நிலையத் தாக்குதல்,1985 காயன்கேணியில் இராணுவத்தினர் மீதான பதுங்கியிருந்து தாக்குதல,வந்தாறுமுலை கண்ணிவெடித்தாக்குல், ஏறாவூர் பொலீஸ் நிலையத்தாக்குதல் பொட்டம்மான் அவர்களால் கொடுவாமடுவில் பவல்கவசவாகனம் மீதான தாக்குதல் கண்ணிவெடித் தாக்குதல், சிறப்பு அதிரடிப் படை STF மீதான தாக்குதல், என்பன திட்டமிட்டு நாடாத்தப்பட்டனவாகும். அதுமட்டுமல்ல இம்முகாம்தான் மட்டு அம்பாறை மாவட்டத்தில் போராட்டத்தின் ஆணிராகவும அத்திவாரமாகவும் திகழ்ந் து.  புல உண்ணத மாவீரர்களின் பாத சுவடுகளையும் பல நினைவுககைளையும் ஏற்றது மட்டுமல்ல பலபோராளிகளையும் பல முதன்மைத்தளபதிகளையும் வாரியணைத்த பெருமை இம்முகாமையே சாரும் அத்துடன் இந்த முகாமிலிருந்த புளியமரத்திற்கு வீரபாண்டிய கட்டப் பொம்மன் தூக்கிலிடப்பட்ட மரம் போல இதற்கும் ஒரு சரித்திரப் பெருமை உண்டு.

இப்படியான பெருமைகளைக் கொண்ட முகாமின் விழ்ச்சிக்கு துரோகி வஞ்சகன் கருணாவின் சூட்சியே காரணம் கருணா மாவட்டபொறுபெடுத்தவுடன் முகாமின் பலத்தை படிப்படியாக செயலிழக்கத் செய்து இங்கிருந்த பல இராணுவத் தளபாடங்களான ரம்போ போன்ற ஆயுதங்களை கருணா புலிபாய்ந்தகல் முகாமிற்கு இடம் மாற்றினான். பின்பு முக்கியமாயிருந்த VM முகாம் படிப்படியாக அகற்றப்பட்டது.

1991 ல் லெப். கேணல் ஜோய் பொறுப்பு ஏற்ற பின்பு மிளகட்டியமைத்தான். மேஐர் அன்ரனிக்குப் பின்பு ஜோய்யின் வருகையால் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் மீண்டும் மட்டு அம்பாறையில் உத்வேகம் கொண்டன. லெப். கேணல் ஜோய்யின் போரியல் தந்திரமும் வீரமும் தலைமைத்துவத்தின் மீது கொண்ட தளராத விசுவாமும் அதைவிட மக்கள் பால் அவன் கொண்ட அன்பும் தலைவரைமட்டுமல்ல மட்டு அம்பாறை மாவட்ட மக்களையும் சக போராளிகளையும் கவர்ந்தது. அவர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் ஆளானான். இவை எல்லாம் கருணா என்ற வஞ்சகனுக்கு பொறாமையை உண்டுபன்னியது. பல இடங்களில் புன் முறுவலுடன் தனது உளக்குமுறலை அடக்கியும் கொள்வான். கருணாவை நன்கு அறிந்தவன் என்ற வகையில் என்னால் யூகிக்க முடிந்தது. ஏதோ ஒரு வகையில் இவன் தனது வஞ்சத்தைக் கக்குவான் என்பதும் எனது ஐயப்பாடாக இருந்து வந்தது.

இனி எப்படி ஜோயை தனது சூட்சி வலையில் சிக்க வைத்து தீர்த்து கட்டலாம் என நாட்களை எண்ணத்தொடங்கினான்.

 

இவன் எப்படி ஜோய்யை தனது சூட்சிக்குள் சிக்க வைத்தான் என்பதை அடுத்துத் தொடரும் தொடர்களில் தருகிறேன். 

 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.