சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 14 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

நிறா எனும் ஹொலிவூட் நடிகை

மட்டு அம்பாறை தொடர்பகத்தின் மூலம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக  குளிரோடை எனும் குளிர் பான உணவகமும், நீராவியடியில் ஒரு கோழிப்பண்ணையும் இருந்தது. இதில் குளிர்பானக் கடைக்கு ரவி என்பவர் கோழிப்பண்ணைக்கு சான்டோ என்பவர் பொறுப்பாளராக இருந்தனர். சான்டோ கருணாவின் தீவிர விசுவாசிக்கும். 

அத்துடன் எழுதுமட்டுவாள் பகுதியில் அமைந்திருந்த ஐயந்தன் படையணிக்கு வழங்கலுக்குப் பொறுப்பாக  sp என்றழைக்கப்படும் ஈஸ்வர மூர்த்தி என்பவர் கருணாவால் நியமிக்கப் படுடிருந்தார். இவரை உசார் மடையன் என்றும் அழைப்பர். இவர் கருணாவின் அதி தீவிரவாதியாவர்.

இந்த நிறா எனும் கொலிவூட் நடிகைக்கு தினமும் குளிர்பானக் கடையிலிருந்து ஐஸ்கீரீம் உட்பட சகல உணவு வகைகளும் நிறாவுக்குப் போகும், அதேபோல் கோழிப் பண்ணையிலிருந்து முட்டைகளும் கோழி இறைச்சிகளும் போகும். குளிரோடை பெரும் நட்டத்தில் ஓடியது. குளிரோடை கணக்கெடுப்பின்போது நட்டத்தில் ஓடியதால் கருணா ரவியை மாற்றிவிட்டார்.

சில போராளிகள் ராவியிடம் கேட்டார்கள் எந்த நேரத்திலும் குளிரோடையில் சனங்கள் வருகிறார்கள் இப்படியிருக்க ஏன் நட்டத்தில் கடை ஓடுகிறது என்று! அதற்கு ரவி கூறினார் வியாபாரம் நடக்கிறது ஆனால் அதேயளவு உணவுப் பொருட்கள் நிறா வீட்டிற்கும்; போகிறது. ஆதற்கு வரவு செலவு கணக்கு என்பதே கிடையாது என்று மனவேதனைப்பட்டுக் கொண்டார்.

அதே போல் கோழிப்பண்ணையும் நட்டத்திலோடியது. இவ்விடையம் தலமைக்குத் தெரியவர குளிர்பான நிலையமும் கோழிப்பண்ணையும் கருணாவின் நிருவாகத்திலிருந்து நிதித்துறைக்கு மாற்றப்பட்து. நிதித்துறையினர் குளிர்ரருவியைப் பொறுப்பெடுக்குமுன்னர் குளிரருவி நிர்வாகத்தால் அதாவது கருணாவின் நிர்வாகிக விசுவாசிகள் இருவரால் கொழும்பிலிருந்து ஆண் பெண் போராளிகளுக்கு மற்றும் போரில் அங்கங்களை இழந்த போராளிகளுக்கு என உடைகள் உபட பல துணிவகைகள் கொள்வனவு சம்பந்தமாக ஒரு உண்மை தெரிய வந்தது.

யாழ் கொக்குவிலைச் சேர்ந்த சமீபத்தில் கொழும்பில் இறந்த உலகேஸ்வரன் மற்றும் தற்போது இலண்டனில் வசித்துவரும் சுண்ணாகத்தைச் சேர்ந்த ஈசன்; என்பவரின் லொறி மூலம் இவைகள் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டன. இவற்றிக்குரிய பணத்தை குளிரோடை நிர்வாகத்தினர் மேற் குறிப்பிட்ட லொறி உரிமையாளர்களுக்கு தருவதாக கூறினார்கள் ஆனால் கொடுக்கப்படவில்லை! லொறி உரிமையாளருக்கும் போக வேண்டிய இடத்திறகுப் போனால் பிரச்சனையில்லை என்று அதை பெரிது படுத்தவில்லை. ஆனால் எந்தப் போராளிகளுக்கும் அவை போய்ச் சேரவில்லை.மாறாக நிறா எனும் அந்த நடிகைக்குத் தேவையான உடைகளும் துணிகளும் அவர் கைக்கு இடம் மாறின. மற்றய உடைகளை கருணாவின் விசுவாசிகள் இருவரும் விற்று பணத்தைச் சுருட்டிக் கொண்டனர்.

ஏன் இதை எல்லாம் எழுதுகிறேன் என்றால் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கும் தெரியாது கருணாவின் சகாக்கள் இவ்வளவு சாகசங்கள் என்றால் கிழக்கில் ஆகா! சொல்லவா வேண்டும்!!

குளிர்பானக்கடை, கோழிப் பண்ணைக்கும் பின்னர் நடிகை நிறாவின் ஆடம்பர வாழ்க்கைக்கு நெருக்கடி நிலவியது, இதை உடனடியாக நிவர்த்தி செயவதற்காக தனது அதிர் உயர் விசுவாசிகளில் ஒருவரான உசார் மடையன் என்று அழைக்கப்படும் ஈஸ்வர மூர்த்தியை கருணா அழைத்தார். இந்த sp தமிழீழ இசைக்குழுவின் இசை அமைப்பாளராகவுமிருந்து இறுதிவரை கருணாவுடன் சேர்ந்து பணத்தைச் சுருட்டியவர்.

இந்த sp ஒன்றும் சங்கீத வித்துவான் அல்ல முறைப்படி சங்கீதம் பயின்றவரும் அல்ல ஒரு தண்ணீர் குடத்தை எடுத்து தாளம் போட்டுக் கற்றுக் கொண்டவர். இவரின் தாளம் கருணாவின் காதுகளுக்கு கீதமாகக் கேட்க, கருணா அதை நாதமாக ஏற்றுக்கொண்டு பல்லவி தெரியாதவர் பல் இளித்து sp யை ஒரு இசையமைப்பாளராக பிரகடனப்படுத்தி. சில மேளதாளங்களை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்து, sp யிடம் கொடுத்து அதன் மூலம் ஒரு இசைக் குழுவை உருவாக்கினார். இசைக் குழுவின் ஏனைய போராளிக் கலைஞகள் திறமை மிக்கவர்கள் என்பதை மறக்க முடியாதுதான். ஆனால் எங்கள் spக்கு செருக்குக்கூடி தான் இசையமைப்பாளர் இளையராசா என்ற நினைப்புக்கு வந்துவிட்டார். அந்த நினைப்புத்தான் அவர் பிழைப்பைக் கெடுத்ததிற்குக்காரணம்.

நாம் விடயத்திற்கு வருவோம் sp யை அழைத்த கருணா தனது ஆசை நாயகியின் முக்கிய தேவைகளை நிறைவேற்றும்படி கட்டளையிட்டார். அதைப் புரிந்து கொண்டு அந்த விசுவாசியும் செயற்படத் தொடங்கினார்.

வழங்கல்பகுதிப் பொருட்களில் சில நிலா வீட்டிற்கு ஆனுப்பப்பட்டும் இன்னும் சில பொருட்கள் விற்கப்பட்டன. இதில் விற்கப்பட்ட கொருட்களில் மண்ணென்னை பரல்களும் அடங்கும். ஒரு மாதத்திற்கு மட்டும் 10ற்கு மேற்பட்ட மண்எண்னை பரல்கள் விற்கப்பட்டன. அன்றைய சூழ்நிலையில் ஒரு பரல் மண்ணென்ணை ரூபாய் இருபதாயிரம் தொடக்கம் நாற்பதாயிரம்வரை விலை போனது. ஆந்தப் பணம் யாவும் நடிகை நிறாவிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆந்தப் பணத்தை நிறா என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

விதவிதமான தங்க ஆபரணங்கள் வாங்கினார். பெறுமதியான மிக்க பஞ்சாபி உடைகள் வாங்கினார் அன்றைய நாட்களில் ஒரு பஞ்சாபியின் விலை ஐயாயிரம் ருபாவாகும். அது மட்டுமல்ல ஒரு மாதத்தில் அவரின் காதுகள் பல தேபடுகளை ஏந்தி நின்று அழகுபடுத்தும். புதுப்புது டிசையின்களும் நிறாவை குசிப்படுத்தும் இப்படியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்கள். இவ்விடையம் பல போராளிகளுக்கு தெரியவந்தது. அத்தோடு யாழ் றீகன் நகரில் குடியேறியிருந்த சில போரளிக் குடும்பங்களுக்கும் இவ்விடையம் தெரியவர அவர்களம்  இது பற்றி விமர்சனம் தெரிவித்திருந்தனர்.

இதைக் கேள்வியுற்ற நிறா அந்தப் போராளிகளின் வீடு நோக்கிச் சென்று அவர்களை வாய்க்கு வந்தமாதிரி கூடாத வார்த்தைகளால் திட்டிவிட்டு உங்களினடைதோ அல்லது உங்கள் பிள்ளைகளினுடையதொ ஒன்றையும் நான் அனுபவிக்கவில்லை எனது புருசன் தளபதி அவர்களுடைய சொத்துகளிலேதான் நான் அனுபவிக்கிறேன். ஆதில் நான் நகை போடுகிறேன் நல்ல உடை உடுப்பேன் இதைக் கேட்க நீங்கள் யார்? அவர் இல்லாவிட்டால் நீங்கள்’ எல்லாம் வாழவே முடியாது. இனி என்னைப்பற்றிக் கதைக்காதீர்கள் கதைத்தீர்கள் என்றால் இங்கிருந்து துரத்தி விடுவேன் என்று பயமுறுத்தி விட்டு தன் மெய்க்காப்பாளருடன் வாகனத்தில் சென்றாள் நிறா.

இதைக் கேள்வியுற்ற சக போராளிகள் மட்டக்களப்புக்குத் தாங்கள் போனால் பல வழிகளில் வஞ்சிக்கப்படுவோம் என அஞ்சி மௌனத்தில் இருந்தார்கள் அதேபோல் இவ்விடையத்துடன் சம்பந்தப்பட்ட மக்களும் தங்களுக்கும் ஏன் வீண் வம்பு என அதுபற்றி விமர்சிக்காமல் அவர்களும் மௌனித்து விட்டனர்.

சில போராளிகள் கூறுவார்கள் நிறா ஒரு நடிகை மாதிரி வாழ்கின்றாள் என்று!

ஒரு தடவை நிறா தானக்குத் தேவையான ஆடைகளைத் தெரிவு செய்ய புதுக்குடியிருப்பில் உள்ள புடவைக் கடையொன்றிற்குச் சென்று ருபா இருபதாயிரம் பெறுமதியான ஆடைகளை கொள்வனவு செய்து கொண்டு தனது மெய்க்காப்பளருடன் பஐpரோ வாகனத்தில் பறந்து கொண்டிருந்தார்.

அன்றைய தினம் வன்னியில் ஒரு துயரநிகழ்வு நடந்தேறியிருந்தது. கணவன் மணைவி பிள்ளைகள் உட்பட ஒரு குடும்பமே இறந்து பேயிருந்தது. மலேரியாக் காச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இந்தக் குடும்பம் சரியான மருத்துவ வசதியில்லாமல் வறுமையால் மரவள்ளிக் கிழங்கையும் அதன் இலையையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் வயிற்றோட்ட நோயினால் இறந்து போனார்கள். அக்குடும்பத்தின் இறப்பிற்கு வறுமைதான் காரணம். இப்படி பலர் வறுமையால் இறந்து போக இந்த தர்சினி என்ற நிறா ஒரு ஹொலிவூட் நடிகைபோல் வாழ்ந்துகொண்டிருந்தார்.

போராளிகள் பல தியாகங்களைச் செய்து களுத்தில் சயனையிட் குப்பியை தொங்கவிட்டுக் கொண்டு தியாக உணர்வுடன் வாழ்ந்து வரும்பொழுது இந்த நிறாவின் ஆடம்பர வாழ்க்கை ஏனைய பெண் போராளிகளின் தியாகங்களை கொச்சைபடுத்தி வருவதையிட்டு நான் மனம்வருந்திக் கொண்டேன்.  தொடரும்…

வாழ்க தமிழ்த் தேசியம். 

 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.