சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 13 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

நிறா! நிறா! ஓடிவா! அடாவடி செய்து ஓடிவா!  ஜெயாவுக்கு ஆப்புவைக்க ஓடிவா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் 1990 காலப்பகுதியில் போராளிகளாகத் தங்களை இணைத்துக்கொண்டு வலம்வந்த காலகட்டமது. மகளிர் பிரிவில் அரசியல் வேலைகளை முன்னெடுத்து திறம்பட செய்தவரான வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுந்தரி யாழ்ப்பாணத்திலிருந்து வாகரை மகாநாட்டிற்கு வந்தவேளையில் பல யுவதிகளை இயக்கத்திற்கு சேர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டார். 

இவரைத் தொடர்ந்து யாழிலிருந்து ஜெயா வந்து மகளிர்பிரிவுப் பொறுப்பாளராகச் செயற்பட்டு பெண்போராளிகளிற்கான பயிற்சிப்பாசறையை நடத்த ஆரம்பித்தார். சில இராணுவப்பயிற்சிப் பாசறைகளும் இதிலடங்கும்.


 ஜெயாவின் அரசியல் வேலைத்திட்டங்களால் பல யுவதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளோடு இணைந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்கத்தின் தலைவர் பற்றியும், தலைமைத்துவ செயற்பாட்டு வீரியம் பற்றியும் தெளிவான கருத்துக்கள் போன்றவைகள் அவரின் போதனை வகுப்புக்களாகவிருந்தன.

 

ஆனால் துரோகி கருணாவுக்கு இது எரிச்சலையும் பொறாமை கலந்த ஆத்திரத்தையுமூட்டின.

இவ்வேளையில் மட்டக்களப்பு முன்னாள் போராளியாக செயற்பட்ட கருணாவின் ஆசைநாயகி நிறா அன்ரியின் அடாவடித்தனங்கள் தொடங்கின. கருணாவின் அந்தரங்க உளவுப்பிரிவில் வேலைசெய்வது மட்டுமல்ல. தனக்கென்ற தனிப்பிரிவையும் தொடங்கினார். அந்த தனிப்பிரிவில் கருணாவின் விசுவாசிகளே அங்கம் வகித்தனர்

நிறாவினால் இயக்க விதிமுறைகளுக்கு அமைய நடக்கமுடியவில்லை!

மற்றைய போராளிகளால் மகாராணி என்னும் பட்டப்பெயர் நிறாவுக்கு சூட்டப்பட்டது. ஏனெனில் இவரின் நடவடிக்கை அப்படியமைந்திருந்தது.

ஜெயா மீது மற்றைய போராளிகளுக்கு மதிப்பும், விசுவாசமும் இருந்ததை எங்கட நிறா அன்ரிக்கு உண்மையிலேயே பிடிக்கவில்லை.

கருணாவிடம் கூறி ஜெயாவை மட்டக்களப்பிலிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தார்.
கருணாவுடன் தனிப்பட்ட ரீதியாக கலந்தாலோசனை செய்து ஜெயா மீது அபாண்ட குற்றச்சாட்டுக்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஜெயாவிடம் பிழைகள்  என்று ஒன்றும் இல்லையென  உண்மையிலேயே கருணாவின் மனச்சாட்சிக்குத் தெரியும். ஆனால் தன் கொஞ்சும் கிளி நிறாவுடன் கொஞ்சி உலாவவேண்டும் என்ற உணர்வினால் நிறா சொல்வதை வேதமந்திரமாக ஏற்று ஜெயாவுக்கு ஆப்பு வைத்தான் கருணா!

ஜெயா மட்டுநகரிலிருந்து வெளியேறி யாழ் சென்றார். அங்கு தலைமையிடம் நடந்தவை நடந்துகொண்டிருப்பவைகளை பற்றி விரிவாக கூறினார். இதன்பின் உற்று நோக்கிய தலைமை மட்டக்களப்பில் பலமாற்றங்களைச் செய்தது.

இந்த மாற்றங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மட்டக்களப்பில் கருதப்பட்டது தான் லெப். கேணல் ஜோய்யின் வருகை! யார் அந்த ஜோய்? அவனுக்கு நடந்த மோசமான சதி என்ன என்று பின்பு உங்களுடன் பகிர்கின்றேன்.

எங்கே நின்மதி! எங்கே நின்மதி! தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை... யார்யாரோ சொன்னாங்க.. இன்னும் சொல்றாங்க.. எனக்கு நின்மதி இல்ல... இந்தப் பாழாபோன நிறாவால எனக்கு நின்மதி இல்லை. இதை நான் பாடவில்லை! இப்ப எங்கட கருணா அம்மான் இப்படிப்பாடுறாராம்!

யார்? இந்த நிறா?

மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த ஒரு தட்டசுத்தொழிலாளியின் மகளாவார். 1987 8ம் மாதமளவில் இரு யுவதிகள் வந்து இயக்கத்தில் இணைந்துகொண்டனர். இவர்களுக்கு தர்சினி, கொளரி என பெயர்கள் சூட்டப்பட்டன. பின் இந்திய அமைதிப்படை காலத்தின் நடுப்பகுதியில் தர்சினி என்பவருக்குத்தான் நிறா என்று பெயர் மாற்றப்பட்டது. அந்த நிறாதான் கருணாவின் கனவுக்கன்னியாகும்.

1990ல் சண்டை தொடங்கிய காலகட்டத்தில்தான் நிறா கருணாவின் தனிப்பட்ட புலனாய்வு வேலைகளை செய்யத்தொடங்கினார். தன்னைப் பற்றியும் கருணா பற்றியும் விமர்சிப்பவர்களை அதாவது ஆண், பெண் போராளிகளை கருணாவுக்குப் போட்டுக் கொடுத்து பலவழிகளில்  பழிவாங்கினாள் நிறா!

முன்னைநாள் மகளிர் பொறுப்பாளர் ஜெயாபோல முன்னைநாள் மட்டு அம்பாறை புலனாய்வுத்துப் பொறுப்பாளரான யாழ்.கரவெட்டியைச்சேர்ந்த நிய+ட்டனும் நிறா, கருணாவால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

இரண்டாம் கட்ட ஈழப்போருக்குப்பின் நிய+ட்டன் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று தலைமையிடம் நிறா, கருணாவின் அடாவடித்தனங்கள் பற்றி கூறினார். தனது ஆசைநாயகி பற்றி நிய+ட்டன் தலைமையிடம் கூறியது கருணாவுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையுமூட்டின. அதனால் மற்றையை போராளிகள் மத்தியில் நிய+ட்டன் பற்றிய பொய்ப்பிரச்சாரங்களை கருணா சொல்லத்தொடங்கினார். அது மட்டுமல்ல தனக்கு நடந்த பிரச்சனையை ஒட்டுமொத்தமாக எல்லாப் போராளிகளுக்கும் நடந்ததாகவும் எங்களைப்பற்றியும் மாவட்டம் பற்றியும் நிய+ட்டன் தலைவரிடம் கூடாமல் கூறியுள்ளார் என்று கருணா கதையளந்தான். மட்டு, அம்பாறை போராளிகள் நிய+ட்டனை அன்புடன் சிவா அண்ணை என்று பாசத்துடன் அழைத்தனர். இருப்பினும் கருணாவின் விசுவாசிகள் மட்டுமே இதை நம்பினர்.

புளுக்குனாவ அதிரடிப்படை முகாம் உட்பட பல தாக்குதலில் கைப்பற்றப்பட்ட கோல்கொமாண்டோ இயந்திரத்துப்பாக்கிகளை சிலருக்கு கொடுத்தபோதும் நிய+ட்டனுக்கு அதை கருணா கொடுக்கவில்லை! நிய+ட்டனுடன் தனக்கிருந்த பகையால்தான் இப்படி கருணா நடக்கக் காரணமாகும். ஏனெனில் தென்னிலங்கைப்பகுதியில் வைத்து நிய+ட்டன் கடத்தப்பட்டதற்கும் கருணாவின் பங்கிருந்தது என்பது உண்மையாகும். நிய+ட்டன் மீது தனக்கு இருந்த நீண்டநாள் பகையைத்தீர்க்க அந்தச் சூழ்நிலையும் சம்பவமும் துரோகி கருணாவுக்கு ஏதுவாகயிருக்கலாம்.

மட்டக்களப்பின் மகளீர் பொறுப்பாகயிருந்த ஜெயா மட்டக்களப்பைவிட்டு வெளியேறியபின், நிறா அப்பொறுப்பை எடுத்தவுடன் ஜெயாவுடன் நின்று செயற்பட்ட அநேக போராளிகளை பலவிதமாக நிறா பழிவாங்கத்தொடங்கினார். இவரின் கடும்போக்கால் சிலர் சித்திரவதைக்குள்ளாகினர். இதனால் திறமைமிக்க பெண்போராளிகள் அநேகர் இயக்கத்தைவிட்டு வெளியேறினர். கருணாவின் பெரும்பாலான விசுவாசிகள் இவ்விடயம் தலைமைக்குத் தெரியாமல் மறைப்பதற்கு பெரும்பாடுபட்டனர். இதில் வெற்றியும் கண்டனர்.

இருப்பினும் லெப். கேணல் ஜோய்யின் மட்டக்களப்பு வருகையின்பின் இவ்விடயங்கள் தலைமைக்கு ஜோய்யால் கூறப்பட்டது. இதை அறிந்துகொண்ட கருணா ஜோய்மீது தனது வஞ்சத்தைத் தீர்க்க முடிவுவெடுத்தனர். அந்த வஞ்சகத்தின் முழுவடிவம் நான் மேற்கூறியது போல பின்னர் தருகின்றேன்.

ப+நகரி தவளைப்பாய்ச்சல் நடவடிக்கைத் தாக்குதலுக்கு மட்டக்களப்பிலிருந்து பலபோராளிகள் யாழ்ப்பாணம் வந்தனர். அப்போராளிகளும் எங்கட நிறா அம்மையாரும் புறப்பட்டார். நிறாவுடன் வந்த பெண்போராளிகளும் தலைமைக்கு நிறாபற்றியும் அங்குள்ள நிலவரம் பற்றியும் கூறினர். ஆனால் தலைமையால் உடன் இதற்கு பெரிய நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை. அதற்கு ஒரு காரணம் ப+நகரிச் சமராகும். அங்கு நடந்த திருகுதாளங்களை விபரமாக ப+நகரிச்சண்டையின் பின் கூறிவிடலாம் என நினைத்தோர் பலர் அச்சமரில் வீரச்சாவடைந்து விட்டனர்.

இருப்பினும் கருணா, நிறா காட்டில் அப்போது மழை என்பதை யாரும் மறுக்கமுடியாது!

1993 மே மாதம் 1ம் திகதி யாழ்ப்பாணத்தில் கருணா, நிறா திருமணம் நடந்தது. அதன்பின் நிறா இயக்கத்தைவிட்டு விலகி குடும்ப வாழ்க்கைக்குச் சென்றார். அக்காலகட்டத்தில் தென்மராட்சி எழுதுமட்டுவானில் ஜெயந்தன் படையணி என்று பெயர் சூட்டி ப+நகரித்தாக்குதலுக்காக ஒரு படையணி நிலை கொண்டிருந்தது. அந்த முகாமை அப்போது நிர்வகித்து வந்தவர் கேணல் பானு அவர்கள்.  அவ்வேளையில் கருணா யாழ் நகரப்பகுதியில் குடும்பமாகவிருந்த கருணாவுக்கு பல பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கருணாவின் மனைவி என்பதால் நிறாவுக்கும் பல மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

திருமணத்திற்குப்பின் இயக்கத்தைவிட்டு விலகிய நிறாதான் இயக்கத்தில் இருப்பதுபோல சக மெய்ப்பாதுகாவலர்களுக்கு பல கட்டளைகளையிட்டு தான் ஒரு முடிக்குரிய இளவரசிபோல நடந்துகொண்டார்.பெண் விடுதலைக்கு என்று அப்போது புறப்பட்ட தர்சினிதான் பின் நிறாவாக நிலைகுலைந்து நிர்க்கதியானார். நிறா தற்போது சேர்ந்துள்ள கூட்டம்தான் மிக மிகச்சரியானது. எப்போதே இதை அவர் செய்திருக்கலாம். தமிழனின் கதையை முடிக்க பகைவன் படாதபாடுபட்டுக்கொண்டிருந்த வேளைதான் முடி சூட்டிக்கொள்ள எங்கட நிறா அன்ரி படாதபாடுபட்டு மற்றவர்களையும் படாதபாடு படுத்தினார்.

மனச்சாட்சியுள்ள மானிடரே இதைக் கொஞ்சம் கவனியுங்கள்!

மண்மீட்புப்போரையும் அதை நேசித்து போர்களமாடும் போராளிகளையும் கருணா என்ற கயவனின் தனிப்பட்ட நடவடிக்கை எந்தளவுக்குப் பாதித்தது என்பதற்கு ஒரு உதாரணத்தை உங்கள்முன் வைக்கின்றேன்.

எழுதுமட்டுவான் முகாமில்வைத்து ஒரு போராளிக்கு பாம்பு தீண்டிவிட்டது. அங்கே எந்தவொரு வசதியுமில்லாத காலகட்டமது. தளபதி பானுவோ, கருணாவோ அங்கு இல்லை! யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டுபோக வசதியில்லை!’

முகாமின் தேவைக்காக வழங்கப்பட்ட ”வண்டி” யாழ் நகரிலிருந்து நிறாவின் வீட்டில் இருந்தது. அவ்வாகனம் முகாமிலிருந்தால் அந்தப்போராளியை உடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என சகபோராளிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.

ஆனால் இதில் முக்கியமான விடயம் ஒன்னையும் உங்களுடன் பகிர்கின்றேன்.

ஒருதடவை தேசியத்தலைவர் சக போராளிகளுடன் தனது வாகனத்தில் காட்டுவழியொன்றில் பணயம்செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பொதுமகனுக்கு மிதிவெடி வெடித்து அப்பொதுமகனை துவிச்சக்கரவண்டியில் இன்னுமொரு  பொதுமகன் கொண்டுசென்றுகொண்டிருந்தார். ஏனெனில் அச்சூழ்நிலையில் வாகனப் போக்குவரத்து குறைவு. இதை அவதானித்த தலைவர் தான் பயணம்செய்யும் வாகனத்தைக்கொடுத்து உடனே அந்த  கொண்டுசெல்லும்படி கட்டளையிட்டார். சக போராளிகள் எவ்வளவோ கூறினார்கள். தாங்கள் வேறு வாகனத்திற்கு அறிவித்துவிட்டோம் என்று. ஆனால் தலைவர் தனது கட்டளையை உடன் நிறைவேற்றும்படி சக தளபதிகளுக்கு கூறினார். அதேபோல அந்த  பொதுமகனை தனது வாகனத்தில் சிகிச்சைக்காக அனுப்பிவிட்டு தனது மற்ற வாகனத்திற்காக காத்திருந்தார். இச் சம்பவத்தை தனது தலைவர் பற்றிய அனுபவத்தை பொறுப்புவாய்ந்த தளபதியொருவர் பகிர்ந்திருந்தார்.

தன் இன மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவராக உலகமெல்லாம் பேசப்படுவதற்கும், போற்றப்படுவதற்கும் இப்படியான ஈகையான நிகழ்வுகள்தான் உண்மைகள் காரணிகளாகும்.

தலைவர் சுட்டுவிரல் காட்டினால் அடுத்த நடவடிக்கையை நிறைவேற்ற அர்பணிப்புள்ள போராளிகளும், மக்களும் உள்ளனர். இதற்குக் காரணம் எம்தலைவனின் தனித்துவமான செயற்பாடே.ஏன் இவ்விடயத்தை முன்வைக்கின்றேன் என்றால் கருணாவின் தனிப்பட்ட செயற்பாடுகள் எந்தளவுக்கு மற்றையை போராளிகளையும் மக்களையும் பாதித்தது என்பது மட்டுமல்ல தேசியத் தலைவர் என்றால் யார்? கருணா என்றால் யார்? என்று இனம்புரியாத பச்சோந்திகளுக்கு இச் சிறு உதாரணம் போதும்! என்பதற்காக

ஏனெனில் எழுதுமட்டுவானில் நடந்த சம்பவத்தை மற்றையப் போராளிகள் விமர்சித்தனர். கருணாவின் விசுவாசிகளால் அவர்கள் இனங்காட்டப்பட்டு நிறாவின் வார்த்தைகளால் சில போராளிகள் தண்டிக்கப்பட்டனர்.தண்டிக்கப்பட்ட போராளிகள் மட்டக்களப்பு அனுப்பப்பட்டு இயக்கத்தைவிட்டு விரட்டப்பட்டனர். அவர்களுள் முக்கியமானவர்களில் ”மைன்ஸ்” துரைக்குட்டி, நகுலன் போன்றோரும் அடங்குவர்.

துரைக்குட்டி ”மைன்ஸ்” அதாவது மிதிவெடி மற்றும் வெடிமருந்துகள் கையாள்வதில் திறைமையானவர்.ஆனால் நிறாவுக்காக துரைக்குட்டியை அடித்து கருணாவால் இயக்கத்தைவிட்டே விரட்டப்பட்டவர். துரைக்குட்டி தற்போது ஐரோப்பாவிலுள்ளார். நகுலன் இலங்கையில் திருமணம் செய்து வாழ்கின்றார்.

-    மீண்டும் அடாவடிகளுடன் ஒருபெண் ரவுடிபோல நிறா வருவாள்...
-    அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.. 

 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.