சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 12 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

IPKF யினர் வெளியேறியவுடன் இரண்டாம் கட்ட ஈழப்போர் மேகங்கள் கிழக்கு வானத்தில் சூழ்ந்து கொண்டன. அம்பாறை மாவட்டத்தில் சிங்கள பொலிஸ் நிலையங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் முற்றுகையிடப்பட்ட போது தளபதி ராமுக்கு இரண்டாவது தளபதியாக அம்பாறையில் மேஜர் கண்ணன் செயற்பட்டான்.

களவாஞ்சிக்குடி இராணுவமுகாமும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கும்புறுமூலை இராணுவமுகாம்கள் என்பன தாக்குதலுக்கு உள்ளாகினாலும் அவை வெற்றிபெறவில்லை. கும்புறுமூலை இராணுவமுகாம்  தோல்விக்கு முக்கிய காரமாகச் செயற்பட்டவர் கருணாவின் சகோதரரான றெஜியாகும். ஏனெனில் சிறந்த போர் அனுபவமில்லாதவரும், பயந்த சுபாவமுள்ளவரான றெஜி இச்சண்டையில் பலமைல்களுக்கப்பாலுள்ள கிரானில் நின்று கட்டளையிட்டார். றெஜின் இத்திறமையைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்த விடையமே.


ஆனால் இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல கல்முனை இராணுவமுகாம் தாக்குதலமைந்தது. இப்பெரிய சமரில் மேஜர் கண்ணன் ஈடுபட்டான். கண்ணனின் வீரத்திற்கு மெருகுட்டுவதாகவே இச்சமர் அமைந்தது.
பலமணி நேரம் நீடித்த இந்தப் போரில் இராணுவம் திக்குகுக்காடியது. ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் உடன் முடிவெடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டனர். பல இராயுவ இழப்புகளுக்கு மத்தியில் ஆயுததளபாடங்களையும் விட்டுவிட்டு கடற்படையின் உதவியுடன் கடல்மார்க்கமாக இராவயுத்தினர் தப்பியோடினர். பலவகையான ஆயுததளபாடங்கள் கைப்பற்றப்பட்டன.  

கிழக்கின் போரியல் வரலாற்றில் இச்சமரில்தான் ஸ்ரீலங்கா இராணுவப்படை கடற்படையின் உதவியுடன் தப்பியோடியது என்பது குறிப்பிடதக்கது.

அதனை பின்னர் இராணுவம் மிகப்பெரிய இராணுவ நடைவடிக்கையை மேற்கொண்டதால் அம்பாறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அணிகள் காட்டுக்குள் நகரவேண்டிய சூழ்நிலை உருவாகியது. அங்கும் இராணுவ நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இச்சமரில் மேஜர் கண்ணன் பங்கு மிகப் பெரிதாக இருந்தது. பிற்பகுதியில் கண்ணன் வன்னிக்குப் பயணமானான்.

அங்கு சென்று முல்லைத்தீவுக்காட்டில் தேசியத்தலைவரைச் சந்தித்துவிட்டு சகபோராளிகளுடன் மீண்டும் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தான்.

மட்டுஅம்பாறை தளபதியாக இயக்கத்தலைமையால் கண்ணன் நியமிக்கப்பட இருந்த காலமது! கருணாவின் சகோதரனான மன்னம்பிட்டிக்காட்டில் அநாதரவாக இறந்துகிடந்த றெஜி உட்பட கருணாவின் விசுவாசப் பொறுப்பாளர்கள் இதைச்சகிக்க முடியாமல் தவித்தனர். தான்தான் தனது தம்பியான கருணாவுக்கு அடுத்தகட்டத் தளபதி என்று கற்பனையுடன் ஆயிரம் மனக்கோட்டையுடன் றெஜி காத்திருந்தான். ஏன் கருணா கூட அப்படித்தான் நினைத்திருந்தான்.

பொறுப்போ பதவியோ அவர் அவர் திறமைக்கேற்ப கொடுக்கப்படுபவையே. அவை எங்களைத்தேடி வரவேண்டுமே தவிர நாம் அவற்றைத் தேடி விசர்பிடித்த நாய்போல் அலையக்கூடாது. அதற்காக கபடச் செயல்கள் புரிவது மிகப்பெரிய துரொகத்தனமாகும். இந்த ஈனப்பிறவிகளுக்குள் கருணா குழுவும் அடங்கும்.

இருப்பினும் துரொகி கருணா மேஜர் கண்ணன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளியில் காட்டவில்லை. கண்ணன் திறமைமிக்க நல்ல போராளி. வருங்காலத்தில் தளபதியாக வரவேண்டியவன் என்று கருணா எல்லோரிடமும் கதைபரப்பினான்.

ஆனால் தனது சகோதரன் றெஜியுடன் மட்டும் இரகசிய சதி ஆலோசனையொன்றை மேற்கொண்டான் துரோகி கருணா. 1990ல் இறுதிக்காலப்பகுதியில் அதற்கான சந்தர்ப்பம் அத்துரோகிகளுக்குக் கிடைத்தது.

1990ல் வந்தாறுமூலையில் இராணுவத்தினர் மீது கண்ணன் தலமையில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. கண்ணனுக்கு எதிராக இச்சதியை றெஜி நெறிப்படுத்தினான். கருணாவின் மிகப் பெரிய விசுவாசிகளில் ஒருவனின் துப்பாக்கியில் இருந்து துரோகத்துடன் சீறிப்பாய்ந்த றவையொன்று கண்ணனைத் தாக்கியது. எதிரிக்குப் பகைவனாக பகைவர்களுக்கு எதிரியாக பலகாலம் வலம் வந்த வீரத்தளபதியை பல வீரமறவர்களை ஈன்றெடுத்த வந்தாறுமூலை மண்ணது தன்மடியில் ஏற்றுக்கொண்டு வீரவணக்கம் செலுத்திக் கொண்டது.

வீழ்ந்தாலும் வித்தாக........ மடிந்தாலும் மக்களுக்காக என்று வாழ்ந்த மாவீரன் துரோகிகளின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டான். சகபோராளியால் கண்ணப்பெருமான் என்று அன்போடு அழைக்கப்பட்ட இந்தச் செயல்மிக்க மாவீரனின் இழப்பானது தர்மப்போரை நேசித்த இப்போதும் நேசித்துக் கொண்டிருக்கும் இதயங்களை ஒருதடவையல்ல பலதடவை நெருடியே சென்றது. எது எப்படியோ இச்சதியைச் செய்த துரோகிகளின் ஆட்டத்திற்கு தடையாகவிருந்த காய்களில் கண்ணன் என்ற காயும் வெட்டப்பட்டது என்பது உண்மையாகும்.

இச்சதியை நேரடியாக கண்டு அனுபவித்த போராளி என்னுடன் இதைக்கூறும் போது அவர் விழிகள் கண்ணிர்க்குடம் சுமந்திருந்தது. இதை விரிவாக ப+நகரிமுகாம் தாக்குதலுக்குப்பின் கூறுகிறேன் என்றார். ஆனால் அவர் அம்முகாம் தாக்குதலில் வீரச்சாவடைந்து விட்டார். பனித்திரையல்ல இது! ஆனால் ....
இன்னும் புரியாத மர்மத்திரையாகவே இச்சதியுள்ளது.!

வாழ்க தமிழ்த் தேசியம்.

 தொடரும்… 

 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.