சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 11 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

இதனால் மட்டக்களப்பு மக்கள் மனதில் இருந்த சந்தேகம் அம்சம்பவத்துடன் தீர்ந்தது என்றே கூறலாம். 1987 காலப்பகுதிகளில் மிகமுக்கியமான தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா பொலிஸ் புலனாய்வுத்துறையினரால் மேஜர் கண்ணன் பலதடவை தேடப்பட்டார். இருபபினும் அவர்களால் கண்ணனை ஒன்றும் செய்யமுடியவில்லை.

1987IPKF காலகட்டமது. உலகின் நான்காவது வல்லரசாகக் கருதப்பட்ட இந்தியநாட்டின் இராணுவத்தினர் தமிழிழவிடுதலைப்புலிகளிடம் மூக்குடைபட்டுப் பாடம் கற்றுக் கொண் டிருந்தனர். கொரிலாக்களாக புலிகள் இயக்கம் காட்டுப்பகுதியில் இயக்கப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இருப்பினும் மக்கள் முன் பிரசன்னமாகி அரசியல் வேலைகள், மற்றும் காடடிலுள்ள சகபோராளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புதல் அதைவிட எதிரிகள் மீதும் அவர்களின் அடிவருடிகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டு சீhகு லைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு நகர்ப்புறக் கொரில்லாக்களாக ஈடுபட வேண்  டிய  கட்டாயத் தேவையிருந்தது. அந்த நகர்ப்புற கொரில்லாக்களுக்குள் மட்டக்களப்பு மாவ ட்டத்தில் முதன்மையாக நின்று செயற்பட்ட போராளிகளுக்களுள் கண்ணனும் முதன்மையானவனாகச் செயற்பட்டான்.


இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பகலும் இரவிலும் மக்களுடன் கலந்து இயக்க வேலைகளை முன்னெடுத்த போராளி இவனாகும். காட்டிலுள்ள போராளிகளுக்கு உணவுப் பொருட்கள் தொடங்கி மருந்துப்பொருட்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை நிறை வேற்றிக்  கொண்டிருந்தான். இவ்வேளையில் ஒருதடவை கொம்மாந்துறை தீவுப்பகுதியில் இவன் தங்கியிருந்த மறைவிடத்தை அதிகாலை வேளையில்

IPKFயினர் சுற்றிவளைத்தனர். அவ்வேளையில் தனது கைத்துப்பாக்கியாலும் மற்ற இயந்திரத் துப்பாக்கியாலும் IPKF யினர் அதிர்ச்சியடையும் வண்ணம் உடைத்துத் தப்பிச்சென்றான் கண்ணன். இச்சுற்றிவளைப்பில் தப்பும்போது பிரப்பம் காட்டு முட்கள் அவனது உடலை காயத்துக்குள்ளாக்கியதால் மக்கள் இவனுக்கு மருந்திட்டு அனுப்பினர்.

காட்டிலுள்ள சகபோராளிகளுக்கு இவன் மருந்துப் பொருட்கள் எடுக்க ஏறாவ+ர் எனும் நகரப்பகுதிக்குச் சென்றான். அவ்வேளையில்IPKFயினர் இவனைச் சுற்றிவளைத்தனர். தனி நபராக நின்று மிகத்துணிச்சலுடன் அச்சுற்றிவளைப்பை மிக வெற்றிகரமாக முறியடித்துத் தப்பிச் சென்றான்.

அமபாறையில் TNA தேசத்துரோகக் கும்பலுக்கெதிரான நடவடிக்கையில் தனக்கென்று முத்திரைபதித்த அம்பாறையின் கதாநாயகன் என்று அப்போதும் இப்போதும் வர்ணிக்க ப்படுகின்ற வீரத்தளபதியான மேஜர் அன்ரனியுடன் சேர்ந்து மேஜர் கண்ணன் சிறப்பாக ஈடுபட்டான். இந்நடவடிக்கையால் TNAயினர் சிதறிக்கப்பட்டு, முற்றுமுழுதாக விரட்டப் பட்டனர்.

…வாழ்க தமிழ்த் தேசியம். 

தொடரும்... 

 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.