|
|
|
|
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 10 |
|
|
|
மேஜர் கண்ணனின் மர்மக் கொலையும் கருணா, றெஜி கூட்டுச்சதியும்
உண்மைகள் என்றுமே உறங்குவதில்லை!
உறங்கினாலும் அவை மறைந்தோ புதைந்தோ போவதில்லை!
அந்த வீரமகன் வீழ்ந்தது எதிரியால் அல்ல!
நம்பிக்கைத் துரோகியால்.....
'மறைகின்ற சூரியன் இரத்தம் சிந்துவதால்தான் மறுநாளும் வாழ்கிறது ஒரு விடுதலைப் போராளிபோல"
என்ற இரும்பொறையின் கவிதைகளாக என்றும் எப்போதும் இப்போதும் எம் மனதில்
அம்மாவீரன் வாழந்து கொண்டிருக்கிறான்.உயர்ந்த உருவம், ஆரவாரமில்லா
அமைதியான அழகான தோற்றம், பல தடவை புன்னகையை விரும்பும் வதனம், எந்தப்
பிரச்சனையையும் சமாளித்து நிலமையை சரி செய்யும் இயல்பு! வீரமும் துணிவும்
இவனுக்கு சாமரம் வீச ஈழவிடுதலைப் போராட்ட பாதையில் இவன் பாதங்கள்
நகர்ந்தன. ஆம்! அவன்தான் விலைபேச முடியாத வீரத்தளபதிகளிலொருவன் மேஜர்
கண்ணன்.
ஒரு புறத்தே கடற்கரைச்சார்பு தொடர் சிறுபற்றைக்காடுகளும் மறுபுறத்தே
படுவான்கரை திசைநோக்கி பச்சைவயல் வெளிகளும் சிறிய தீவும் அமையப்பெற்று
இயற்கையவளை போர்வையாக்கிய கொம்மாந்துறை கிராமம் ஈர்ந்த வீரர்களில்
செல்லையா உதயகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மேஜர் கண்ணனும் அடங்குவான். தனது
ஆரம்ப குடும்ப வாழ்க்கை காலத்தில் தொழில் நிமிர்த்தமாக மத்திய கிழக்கு
நாடொன்றுக்குச் சென்று வந்தான்.
அக்காலப்பகுதியில் 1985ல் வந்தாறுமூலையில் வைத்து சிறிலங்கா பொலிஸ்
புலனாய்வுத்துறை, மட்டக்களப்பு அதிகாரிகளுள் ஒருவரான பியசேனாவின்
வாகனத்துக்கு கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அக்கைக்குண்டு
பியசேனாவின் வாகனத்தை முற்றுமுழுதாகத் தாக்கவில்லை. இருப்பினும்
ஆத்திரமும், ஆவேசமும் அடைந்த சிறிலங்காப்படையினர் வீதியில் போவோர்
வருவோரென்ன எல்லோரையும் நையப்புடைந்து பல அப்பாவித் தமிழ் இளைஞர்களை கைது
செய்து சிறைக்கள் தள்ளி சித்திரவதை செய்தனர். அவ்வரிசையில் கண்ணனும் கைது
செய்யப்பட்டு இன்னலுக்குள்ளாக்கப்பட்டு கொஞ்ச காலத்தில் விடுதலை
செய்யப்பட்டான்.
ஆனால் அவனின் உள்ளமது வேதனையில் விரக்தியுற்றது. தனக்கே இந்தநிலையென்றால்
இன்னும் எத்தனையோ அப்பாவிகளின் நிலை என்னவாகவிருக்கும் என ஆழமாகச்
சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக தன் குடும்பபந்த வாழ்வைத் துறந்த
நிலையில் துறவறமான வாழ்வினைத் தொட்டான். துறவறம் என்றவுடன் என்ன குழம்பிப்
போய்விட்டீர்களா? துறவறம் என்று நான் சொல்லுவது வீடு, மனைவி, மக்கள்,
சொந்தபந்தம், சுற்றத்தார் எல்லோரையும் பிரிந்து காவி வஸ்திரம் அணிந்து
காசிக்கோ அல்லது வெறு எங்கேயோ சாமியாராகப் போவதையோ நான் குறிப்பிடவில்லை.
அவர்கள் அனைத்தையும் துறந்து போவது தங்களைத் தனிமைப்படுத்தவதற்காக. ஆனால்
.. அந்த துறவறத்திலும் ஒரு சுயநலம் உண்டு.
ஆனால் போராளியாக தங்களை நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுப்பவர்களின் வாழ்வு
வித்தியாசமானது, வேறுபட்டது. தன்னூயிரினையே தற்கொடையாக்கும் இயல்புதான்
உண்மையான துறவறம். அதில் உண்மையான தெய்வீகம் உண்டு. ஆனால் எந்த மதத்தையும்
இவை சார்ந்தவையல்ல. இந்த துறவறவாழ்வைத்தான் தொடர்ந்தான் கண்ணன். 1985
மார்கழி மாதமளவில் தமிழீழ விடுதலைப்புலிகளில் தன்னை இணைத்துக் கொண்ட
கண்ணன் மட்டக்களப்பில் பயிற்சி முகாமில் பயிற்சியை நிறைவு செய்தான். இவனது
கள்ளம், கபடில்லாத தனிப்பட்ட இயல்பு பொதுமக்களையும் போராளிகயைலும்
இவன்பால் ஈர்த்தன என்று கூறினால் மிகையாகாது. இதுமட்டுமல்ல எந்த
வாகனத்தையும் எடுத்தவுடன் ஓட்டக்கூய திறமையுள்ளவன். இவனது தனிப்பட்ட
திறமைகளில் இதுவுமொன்றாகும். தற்போது புலனாய்வுத்துறை பொறுப்பாகவுள்ள
பொட்டம்மான் மட்டக்களப்பில் இயக்கவேலையில் ஈடுப்பட்ட வேளை 1986ல் அவருடன்
இணைந்து பலதாக்குதலில் மேஜர் கண்ணனின் பெரும் பங்கிருந்தது என்பதை
மறக்கமுடியாது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களாக
இன்னும் எல்லோராலும் மட்டக்களப்பில் அடிக்கடி நிiவு கூரத்தக்கதான
கொடுவாமடு தாக்குதல் என்பது குறிப்பிடதக்க விடையமாகும்.
அதாவது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தென்னாபிரிக்காவிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட பவல் கவசவாகனம் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின்
பாதுகாப்பு கவசமாக விளங்கி போரளிகளுக்கு அது சிம்ம சொப்பனமாக அக்காலத்தில்
வலம் வந்ததை எவரும் மறக்க முடியாது.
இதனால் பல போராளிகள் வீரச்சாவடைந்ததும் பல பொதுமக்கள் அநியாயமாகக்
கொல்லப்பட்டும் உள்ளனர். இநத பவல் கவச வாகனத்தை ஒன்றுமே செய்யமுடியாது.
கண்ணிவெடி கூட இதைச்சிதறிக்க முடியாது என்ற கருத்து மட்டக்களப்பில்
எல்லோர் மனதிலும் அப்போது விவாதிக்கப்பட்டு பேசப்பட்ட கதை.
இதற்கான பதில் 1986ல் பொட்டம்மானால் வழங்கப்பட்டது. இந்த பவல் கவசவாகனத்தை
எந்த இடத்தில் வைத்து சிதறடிக்கலாம் என்று முடிவெடுத்து அந்த இடத்தை
மிகத்துல்லியமாகத் தெரிவு செய்தார் பொட்டம்மான். செங்கலடி பதுளைவீதியில்
அமைந்துள்ள கொடுவாமடுவில் அதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது. ஏனெனில்
கொடுவாமடுவிலுள்ள ஒரு இடத்தில்தான் அந்த பவல் கவசவாகனம் மெதுவாகச் செல்லக்
கூடியதாகவிருந்தது.
இதற்கான Remotcontrolமூலம் இயக்கி வெடிக்கக்கூடிய கண்ணிவெடியை பொட்டம்மான்
ஒழுங்குபடுத்தினார்.அந்தRemotcontrolச் செய்ய கப்டன் முத்தரின் உதவி
தேவைப்பட்டது.
யார் இந்தக் கப்டன் முத்தர்?
கருவாஞ்சிக்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனை பொறியியல் கல்லூரி
மாணவராவர். 1983ன் கடைசிப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளில் இணைந்து
இந்தியாவில் தனது பயிற்சியை முடித்துக் கொண்டார். இவர் தொழில்
நுட்பரீதியான வேலைகளில் முன்னிலையானவர். 1987 ய+ன் மாதம் 28ம்திகதியளவில்
மூதூரில் நடந்த இராணுவ முற்றுகையொன்றில் திருகோணமலையைச் சேர்ந்த மேஜர்
கஜேந்திரன் மற்றும் முன்னாள் யாழ் மருத்துவக் கல்லூரி மாணவனான
ஆரையம்பதியைச் சேர்ந்த மருத்துவப்போராளியான லெப்பினட் சிவகுரு
என்றழக்கப்பட்ட சிவகுருநாதன் போன்றோருடன் கப்டன் முத்தரும்
வீரச்சாவடைந்தனர். அப்போதைய காலகட்டத்தில் பொறியியல்துறைச் சேர்ந்த
லெப்டினட் கப்டன் முத்தரையும், லெப்பினட் சிவகுருவையும் தமிழீழப்
போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இழக்க நேரிட்டது என்பது
குறிப்பிடதக்க விடையம். முத்தர் தன் சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
Remot controlஒன்றைச் செய்து முடித்து பொட்டம்மானிடம் கையளித்தார்.
குறிப்பிட்ட இடத்தில் கண்ணி வெடி பொட்டம்மானால் பொருத்தப்பட்டது.
இத்தாக்குதலுக்கு ரஞசனும், மேஜர் கண்ணனும் மற்றும் ஒரு போராளியின்
பங்குமிருந்தது.
கண்ணிவெடியும், போராளிகளும் பவலை எதிர்பார்த்துக் காத்திருக்க...
தேசியத்தலைவரை விமர்சித்து தமிழ் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்ட
துண்டுப்பிரசுரங்களுடன் கரடியனாறு பாம் அதிரடிப்படை முகாம் நோக்கி பவல்
கவசவாகனம் வந்துகொண்டிருந்தது. கண்ணிவnடிக்கு மேலாக பவல் இறுமாப்புடன்
ஏறியதும் எதிர்பார்த்திருந்த பொட்டம்மானால் கண்ணிவெடி இயக்கப்பட்டது.
பலகாலம் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என்ற இறுமாப்பு டன் அட்டூழியம் செய்த
இந்த அசுர கவச வாகனம் கண்ணிவெடியால் சுக்கு நூறாக்கப்பட்டது.
வாழ்க தமிழ்த் தேசியம்.
கருணாவின் துரோகங்கள் தொடரும்…
|
|
|
|
|
|
விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!
|
|