சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
கருணாவை இயக்கும் எட்டப்பன்! பாகம்-3 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

thumb_ktr ராஜசிங்கத்தாலும், அவருடைய சீடர்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னும் மௌனமாக இருந்து வருகிறார்கள். இவர்களால் போதைப் பொருட்களுடன் பிடிபட்டு, பல வருடங்களாக ரஸ்யா மற்றும் ஐரோப்பிய சிறையில் வாடும் தமிழ் பெண்கள் பற்றிய செய்திகள் பலர் அறியாத அதிர்ச்சிகரமான உண்மைகளாக இருக்கின்றன.

இதை விட கொடுமை என்னவெனில், இவர்களால் பாதிப்பிற்கு உள்ளான சில பெண்களே, ஐரோப்பிய நாடுகளிற்கு வந்து சங்கங்கள் அமைத்து பெண்ணியவாதம் என்று பிதற்றித் திரிவதுதான். இந்தத் துரோகிகளால் சிறையில் வாடும் பெண்களுக்காகவும், பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட பெண்களுக்காகவும் இந்தப் பெண்ணியவாதிகள் இதுவரை குரல் கொடுத்ததாக தெரியவில்லை. இந்த துரோகிகளில் பெரும்பாலானோரும் பாதிக்கப்பட்ட பெண்களும் ஐரோப்பாவில்தான் இருக்கின்றார்கள். சங்கம் அமைத்து பெண்ணியம் பேசுபவர்கள் இந்தத் துரோகிகளை கூண்டில் ஏற்ற முன்வருவார்களா என்று நான் இவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

இவ்வாறு பல சமூக விரோத செயல்களைப் புரிந்த ராஜசிங்கம் பணத்தில் புரளத் தொடங்கினார். அத்தோடு பல நாடுகளின் உளவுப்பிரிவினருடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். நீலன் திருச்செல்வத்திற்கு ஊடாக இவரது தொடர்பு சிஐஏ வரை வளர்ந்திருந்தது. சிஐஏயும் இவரை முழுமையாக ஏற்றுக் கொண்டது. சிஐஏ இவரை சில ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பி தமது உளவு வேலைக்கு பயன்படுத்தவும் செய்தது. இதில் இருந்தே ராஜசிங்கத்தின் உளவுத்திறமை அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அதே நேரம் பாங்கொக்கில் தொடர்ந்து இருப்பதற்காக அங்குள்ள இராணுவ உளவுப் பிரிவினருடனும் நெருக்கமாக இருந்து கொண்டார். அத்துடன் இந்திய உளவுத்துறையான றோவுடனும் இணைந்து வேலை செய்தார். ஆரம்பத்தில் இவரது இந்தியத் தொடர்பு பலர் அறியாத ஒன்றாக இருந்தது. நரசிம்மராவ் காலத்தில் ஏற்பட்ட ஊழல்கள், சந்திரசுவாமியின் கைது ஆகியவற்றின் மூலம், இவரது இந்தியத் தொடர்பு ஓரளவு வெளிச்சத்திற்கு வந்தது. சந்திரசுவாமியின் வெளிநாட்டுப் பின்னணிகள் குறித்து விசாரிப்பதற்காக ராஜசிங்கத்தை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர சிபிஐ முயற்சி செய்தது. ஆனால் றோவினது அழுத்தம் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. சந்திரசுவாமியும் விடுதலையானார்.

கன்னடத்து நடிகர் ரஜனிகாந்த் இமயமலைக்கு சென்று தியானத்தில் ஈடுபடுவதாகச் சொல்லிவிட்டு, பாங்கொங்கிற்கு சென்று இளைப்பாறிக் கொள்வார். அப்பொழுது ரஜனிகாந்தின் "தேவைகளை" ராஜசிங்கமே செய்து கொடுப்பார். சந்திரசுவாமி, ரஜனிகாந்த் போன்றவர்கள் தமது அரசியல் குறித்த ஆலோசனைகளையும், தமது மற்றைய விடயங்களையும் ராஜசிங்கத்தின் அலுவலகத்திலேயே வைத்தே நடத்திக்கொள்வார்கள். அந்த அலுவலகத்தின் முகவரி House No 8/6, Muban Amoropan Nakorn, Sukapibal Road 2, Suan Siam, Bangok -10230, Thailand.  இந்த முகவரியை யாரும் அணுக முடியாதபடி தாய்லந்து உளவுத்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜசிங்கம் என்கின்ற இந்த சர்வதேச உளவாளியின் பலத்தை அறிந்த டக்ளஸ் தேவானந்தா, இவரோடு ஒட்டிக்கொண்டார். போராளியாக இருந்த டக்ளஸிற்கு அனைத்து விதமான கெட்ட பழக்கங்களையும் கற்று கொடுத்தது இந்த ராஜசிங்கம்தான். அத்துடன் அரசின் பின்னணியோடு "AsianTribune" என்ற இணையத் தளத்தை ராஜசிங்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார். இதற்காக ராஜசிங்கத்திற்கு 12 மில்லியன் டொலர் வழங்கப்பட்டதாகவும், இந்த பணத்தில் டக்ளஸ் தேவாநந்தாவும் பங்கு போட்டதாகவும் செய்தி கசிந்துள்ளது.

கருணா வரலாற்றுத் துரோகம் இழைத்த பொழுது, இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவர் இந்த ராஜசிங்கம்தான். அப்பொழுது ராஜசிங்கம் எழுதிக் கொடுத்ததை வாசித்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. கருணாவையும் ராஜசிங்கத்தையும் ஒன்று சேர்த்த பெருமை டக்ளஸையே சாரும். இந்த மூவர் கூட்டணியை இயக்குவது இந்திய உளவுத்துறையான றோ என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கருணாவின் பின்னணியில் ராஜசிங்கம் இருக்கிறார் என்பதை காட்டுவதற்கு, ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

கருணா இந்தியா செல்வதற்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரியாமலே விசா அனுமதி எடுத்து கோவா சென்று ஒளித்திருந்தார். இதற்கு உதவியவர்கள் ராஜசிங்கமும் டக்ளஸ் தேவாநந்தாவுமே ஆகும். விசா எடுப்பதற்கு உதவியவர் சுவிஸ் எயர் விக்கி எனப்படும் விக்னேஸ்வரன். இவர் ராஜசிங்கத்தின் முன்னாள் முகவர் ஆவார். இவரும் பருத்தித்துறையை சேர்ந்தவர்தான். இவர் பிரபலமான பிரயாண ஒழுங்கு நிறுவனம் ஒன்றை கொழும்பு கலடறி ஹோட்டலில் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு ஒன்றில் விக்னேஸ்வரன் சிறு காயங்களுக்கு உள்ளாகி உயிர் தப்பியவர். இந்தக் குணடு வெடிப்பின் பி;ன்னர் இவர் தனது மனைவி பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பிவிட்டார். விக்கி மட்டும் கொழும்பில் இருந்து கொண்டு ராஜசிங்கத்தின் கையாளாக வேலை செய்கிறார்.

கருணா கோவாவில் ஒளித்துக்கொண்டிருந்த பொழுது, கருணாவின் மனைவிக்காக விசா எடுக்க முயன்ற போதுதான், இந்திய தூதரகத்திற்கு தங்களை மீறி நடந்த இந்த சம்பவம் தெரிய வந்தது. கருணாவின் மனைவிக்கு விசா அனுமதி தர இந்திய தூதரகம் மறுத்த போது, அவர் கிலியில் அனைத்து விடயத்தையும் போட்டு உடைத்துவிட்டார். ஆனால் பல மாதங்கள் கழிந்து அண்மையில்தான் இந்த செய்தி வெளியே கசிந்தது. ஆனால் கருணா புலிகளை விட்டு பிரிந்த ஆரம்ப காலத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது.

கருணா கோவாவிற்கு சென்றதும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்தது ராஜசிங்கத்தின் பழைய கூட்டாளி ஒருவரே. அவர் வேறு யாரும் அல்ல. ராஜசிங்கத்தின் நெருங்கிய நண்பரும், சென்னை திருச்சி முகவராக இருந்தவரும், பல காரணங்களால் சுவிஸ் பொலிஸாரால் தெடப்பட்டு தற்பொழுது சிறையில் வாடும் ரிபிசி ராமராஜனே அவர். இவரது வானொலி கருணாவின் பேட்டிகளை பல முறை நேரடியாக ஒலிபரப்பியதையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ளுங்கள். இந்த வானொலி பல வருடங்களாக பணத் தட்டுப்பாடின்றி இயங்குவதற்கு ராஜசிங்கத்தின் உளவுத் தொடர்புகளே மிகவும் உதவின.

ஆரம்பத்தில் கருணா மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. காரணம், கருணா பெண்கள் விடயத்தில் மிகவும் பலவீனமானவர் என்பது உலகு அறிந்த ஒரு விடயம். விடுதலைப்புலிகளால் கருணா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பெண்கள் சம்பந்தமான குற்றச்சாட்டும் அடங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அன்ரன் பாலசிங்கமும் இந்த விடயத்தை தனது உரையொன்றில் சுவையாக புட்டு புட்டு வைத்திருந்தார்.

கருணாவின் இத்தகைய பலவீனத்தை பயன்படுத்திய ராஜசிங்கம், இதன் மூலம் கருணாவை வளைத்துப் போட்டார். பின்பு ராஜசிங்கம் கருணாவை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். அங்கு கருணாவிற்கு அனைத்துவிதமான உதவிகளையும் ராஜசிங்கத்தின் மகள் செய்து கொடுத்தார். இதனால் கருணா தனது மனைவியின் சிந்தனை இன்றி இருக்க, கருணாவின் மனைவியோ டக்ளஸ் மற்றும் முக்கிய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக ராஜசிங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து சிங்கப்பூரை வந்தடைந்தார். கருணாவின் தலைமறைவு வாழ்க்கை ராஜசிங்கத்தின் உதவியுடன் தொடர்கிறது. அத்துடன் ராஜசிங்கமும் சுவீடன் நாட்டில் குடும்பத்தினருடன் தலைமறைவு வாழ்க்கையை நடத்திக் கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பல நாடுகளுக்குச் சென்று, றோவுக்கு ஆள் பிடிப்பதிலும், தமிழ் துரோகிகள் டக்ளஸ் மற்றும் கருணாவிற்கு உதவுவதிலும், இலங்கை, இந்தியா, அமெரிக்கா அகிய நாடுகளுக்கு உளவு புரிவதிலும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் இந்த எட்டப்பர்கள் எப்படித்தான் தலைமறைவு வாழ்க்கை நடத்தினாலும், எத்தகயை பாதுகாப்போடு இருந்தாலும் காலம் இவர்களின் துரோகத்திற்கான தண்டனையை வழங்கியே தீரும். எம்மவர்கள் காற்று புக முடியாத இடத்திலும் புகுவார்கள் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தக் கட்டுரைய முடிக்கின்ற இந்த நேரத்தில் வாசகர்களிடம் சில வார்த்தைகள். இந்த துரோகக் கும்பல் பற்றி முற்று முழுதாக எழுதுவதாயின், அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். நாகரீகம் கருதி பெரும்பாலான விடயங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் சிலவற்றை தவிர்க்க முடியமால் குறிப்பிட்டிருக்கிறேன். வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இங்கு நான் குறிப்பிட்ட அனைத்து விடயங்களிற்கு தகுந்த ஆதரங்கள் வைத்திருக்கிறேன் என்பதையும் என்னால் இவைகளை நிரூபிக்க முடியும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

முற்றும்.

- வன்னியிலிருந்து புலோலியூரான் 

Comments (2)Add Comment
...
written by pathi, November 13, 2007
i should get a news that this rajasingam(?) should be sent to PARALOGAM
...
written by SmartAgent, July 28, 2008
Thurokikal kalaththal kalaiyap pada vendiyavarkal.

Write comment
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley

busy
 

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.