சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எட்டப்பன் ராமராஜன் ஒரு பார்வை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
இவரது பிறப்பிடம் புசல்லாவை. சிறிய வயதிலேயே குடும்ப வறுமை காரணமாக தொழில் தேடிக் கொழும்பு நகருக்கு வந்துவிட்ட இவன் கொழும்பில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செட்டித்தெரு நகைவேலை செய்பவர்களிற்கு சாப்பாடு எடுத்துக் கொடுத்தல் மற்றும் தேனீர் வாங்கிக் குடுத்தல் போன்ற எடுபிடி வேலைகள் செய்து தனது காலத்தை ஓட்டி கொண்டிருந்த வேளை ஒரு நகைக்கடையில் நகை மற்றும் பணம் என்பனவற்றைக் களவாடிக் கொண்டு கொழும்பில் நகைவேலை செய்யும் மட்டக்களப்புக்காரர் ஒருவரின் பழக்கத்தால் அவரிடம் மட்டக்களப்பு நகருக்கு ஓடிவிட்டான். பின்னர் அங்கு களவெடுத்துக் கொண்டு ஓடிய பணத்தில் சிறு வியாபாரங்களென்று செய்து கொண்டிருந்தாலும் அவனது தொட்டில் பழக்கம் விட்டுபோகவில்லை. மட்டக்களப்பிலும் தனது கைவரிசையைக் காட்டிக் கொண்டேயிருந்தான் அப்போது ஒரு காலகட்டத்தில் இவனுக்கு காவல்துறை மற்றும் பொதுமக்களால் பிரச்சனை கூடவே தன்னைத் தற்காத்துக் கொள்ள புளொட் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டு தனது தொழிலைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான்.

பின்னர் காலபோக்கில் இவனது அட்டகாசம் கூடிக்கொண்டு போகவே புளொட் அமைப்பினரே இவனுடன் முரண்பட ஆரம்பிக்கவும் மற்றும் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள்முரண்பாடுகளால் ஏற்பட்ட உட்படுகொலைகள் என்று புளொட் அமைப்பு ஒரு தள்ளாட்ட நிலைமையில் இருந்ததால் இவன் மீது அந்த அமைப்பாலும் உருப்படியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போகவே இவன் அந்த அமைப்பிலிருந்தும் விலகி இந்தியா போய் அங்கு தனது வியாபாரத்தையும் போதைப்பொருள் மற்றும் ஐரோப்பாவிற்கு ஆட்கள் அனுப்புதல் என்று விரிவாக்கிக் கொண்டு இருந்த போதுதான் இலங்கையில் இந்தியப் படையின் வருகை நடந்தது.

அப்போது இந்தியாவில் மற்றைய இயக்கங்களிலிருந்து இந்தியாவில் போய் அகதி முகாம்களில் இருந்தவர்கள் மற்றும் வெளியிடங்களில் இருந்தவர்கள் என்று எல்லாரையும் இந்திய உளவுப்படையினர் ஒன்று சேர்த்து ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டபோது முதலில் புளொட் ரெலோ மற்றும் ஈபிஆர் எல் எவ் அமைப்பிலிருந்தவர்கள் என்று மூன்று இயக்கத்தவரையும் இணைத்து திறீஸ்ரார் என்கிற பெயரில் கொண்டு வந்து இறக்கினார்கள்.

அந்த திறீஸ்ரார் அமைப்பில் மற்றைய இயக்கத்தினர் சிலர் இருந்தாலும் அதில் புளொட்இயக்கத்தினரின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. காரணம் புளொட்டிலிருந்த ராமராஜனை ஒரு குழுவினருடன் மட்டக்களப்பிற்கும் பரந்தன் ராஜன் குழுவினரைக் கிளி நொச்சிக்கும் மாதகல் பாபுஜு குழுவினரை யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு வந்து இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் முகாம்கள் அமைக்கபட்டது.

இதில் மட்டக்களப்பிற்கு அனுப்பபட்ட ராமராஜன் அங்கு ஏற்கனவே இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்த புளொட் மோகன் குழுவினருக்குத் தான் சற்றும் சளைத்தவன் அல்ல என்று தனது அடுத்த நாட்டு ஏவல்காரருக்குக் காட்ட அப்பாவி பொதுமக்களை சித்திரவதை செய்து கொலைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் என்று என்னென்ன வடிவங்களிலெல்லாம் தமிழரைத் துன்புறுத்த முடியுமோ அத்தனை முறைகளையும் கையாண்டான்.அதனால் அவனிற்கு அவனது முதலாளிகள் மனம் குளிர்ந்து முப்பதிற்கு மேற்பட்ட பாதுகாவலர்கள் நவீன சொகுசு வாகனம் வேண்டிய பண உதவி என்று எல்லாம் தாராளமாய் வழங்கினர். இந்த திறீஸ்ரார் என்கிற அமைப்பே பின்னர் பரந்தன் ராஜன் தலைமையில் ஈ என் டி எல் எவ் என்கிற கட்சியாக மாறியது.

பின்னர் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின்போது இவனும் மீண்டும் இந்தியாவிற்கே ஓடி பழையபடி மீண்டும் தனது தொழிகளை ஆரம்பித்தவன் ஐரோப்பாவில் வந்து பிரான்சிலும் சுவிசிலும் அகதி அந்தஸ்துக் கோரிக் கொண்டு இங்கும் தனது போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ள வங்கி மட்டை போடுதல் போன்றவற்றை மேற்கொண்ட போது பிரான்சில் பிரெஞ்சுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சரியான குற்றம் நிரூபிக்கப்படாததால் சிலகாலங்கள் சிறையிலடைத்துவிட்டு இலங்கைக்கு நாடு கடத்தபட்டான். பின்னர் மீண்டும் ஐரோப்பாவினுள் நுளைந்த இவன் இங்கிலாந்தில் போலிப் பெயரில் அகதிப் பதிவை மேற்கொண்டு அங்கிருந்து மீண்டும் தனது தொழிலைச் செய்து கொண்டும் ஒரு வானொலியையும் தொடக்கினான்.

இந்தக் காலகட்டத்தில சுவிசிற்குப் போன இவன் லுசேன் மானிலத்தில் தெரிந்த ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது அங்கிருந்த பெண்ணிடம் யாருமில்லாத சமயம் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட போது அந்தப் பெண் சுவிஸ் காவல்துறையை அழைத்ததால் அவனைக் கைது செய்த காவல்துறை அப்போது அவனிடம் இங்கிலாந்துக் கடவுச்சீட்டு இருந்த காரணத்தால் சரியாக அவனைப் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளாமல் அவனை இங்கிலாந்திற்கே நாடு கடத்திவிட்டனர்.

பின்னர் இவன் நடத்திய வானொலியிலும் பல உள்பிரச்னைகள். அதில்வேலை செய்த பெண் அறிவிப்பாளர்களிடம் இவன் தாகாத அணுகுமுறைகளை மேற்கொண்டதால் எந்தப் பெண்களும் இவனது வானொலியில் வேலை செய்ய முன்வராத நிலையில் ஒரு முஸ்லிம் அறிவிப்பாளரான இர்பான் என்பவரும்(இணையத்தில் தற்போது Nila Fm  என்ற இணைய வானொலியை நடாத்தி வருகிறார் இர்பான்) இன்னும் சிலரும் இவனுக்குக் கை கொடுத்தார்கள்.

அதுவும் கனநாள் நீடிக்கவில்லை காரணம் அந்த முஸ்லிம் அறிவிப்பாளருக்கும் ராமராஜனின் மனைவிக்கும் ஏற்பட்ட தொடர்பால் அந்த அறிவிப்பாளரையும் வெளியேற்றிய நிலையில் இவனது வானொலி இழுத்துச் சாத்த வேண்டிய நிலையேற்பட்ட போது தான் இவனிற்குப் புலிகள் இயக்கத்தின் கருணாவின் கலகம் கைகொடுத்தது. உடனே தனது பழைய அன்னிய முதலாளிகளின் உறைவைப் முன்னைவிட வலுவாகப் புதுப்பித்துக் கொண்ட இவன் வானொலி முலம் ஈழத் தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் எதிராக மீண்டும் முழுவேகத்துடன் செயற்படத் தொடங்க அவன் எதிர்பார்த்தது போலவே ஈழதேசத்தின் எதிராளிகள் எல்லாரிடமிருந்தும் பணமும் கொட்டத் தொடங்கியது.

ஐரோப்பாவில் ஆங்காங்கு புற்றினுள் புதைந்திருந்த சில தமிழினத் துரோகிகளும் இவனுடன் சேர்ந்து கொள்ள இவனோ தானே மாற்றுக் கருத்தாளரின் மாபெரும் தலைவன் என்கிற மமதையில் தமிழே உச்சரிக்கத் தெரியாத இவன் தமிழையும் ஈழத் தமிழரையும் முடிந்த அளவிற்கு விற்று வங்கிக் கணக்கையும் வயிற்றையும் வளர்த்துக் கொண்டிருந்த போதுதான் தன்மானமுள்ள ஒவ்வொரு ஈழதமிழனின் ஆதங்கம் தான் இவனை சுவிஸ் காவல்துறையிடம் முடக்கிப் போட்டது. இவனது கைதின் பின்னர் இவனது துரோகக் கூட்டாளிகளும் பழையபடி மெல்லத் தங்கள் முகங்களைப் பழையபடி புற்றினுள் புதைக்கத் தொடங்கியுள்ளார்கள். இவர்கள் எப்படித் தங்களை மறைத்தாலும் ஈழத்தமிழினம் இவர்களை இவர்கள் துரோகங்களை மறக்கத் தயாரில்லை.

- சாத்திரி -
Comments (0)Add Comment

Write comment
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley

busy
 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.