Home > ஏனையவை > ஆசிரியர் லஸந்த ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய இறுதி வரிகள்

ஆசிரியர் லஸந்த ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய இறுதி வரிகள்

February 19th, 2009

sri_lankan_editorஅன்பின் மகிந்த
என் மரணத்தின் பின் எப்போதும் போல பொய் முகத்தோடு சோகமே உருவாக வேதனைப்பட்டு உடனடி பரிபூரண விசாரணை ஒன்றை நடத்துமாறு நீங்கள் போலீசாருக்கு உத்தரவிடுவீர்களென எனக்குத் தெரியும்.

ஆனாலும் கடந்த காலங்களில் உங்கள் உத்தரவுகளில் தொடங்கிய பல விசாரணைகள் போலவே இந்த விசாரணைக்கும் தீர்வு ஒருபோதும் கிடைக்காது.

உண்மையிலேயே எனது மரணம் யாரால் நிகழும் என்பது எனக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரிந்ததொன்றாக இருக்கும். அதை நீங்களும் நானும் சொல்ல அச்சப்பட்டவர்களாகவே இருப்போம். என் உயிர் மட்டுமல்ல உங்களது உயிரும் காப்பற்றப்படப் போவது, அந்த யதார்த்தத்தின் மேல்தான் என்பதே ,  நிஜம்.

என் உயிர் போவது உங்கள் ஆட்சியின் போது என்பதை உங்களால் ஒருபோதும் மறக்க முடியாததாகவே இருக்கும். அதற்காக நீங்கள் வருந்துவதோடு என்னைக் கொலை செய்தவர்களை காப்பாற்றுவதைத் தவிர்த்து வேறு வழியொன்றும் உங்களுக்கு இருக்க முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும்.

தவிரவும்  தவறிழைத்தோருக்கு தண்டனை அளிக்கப்படாது என உத்தரவாதம் கொடுப்பதை தவிர மாற்று  நடவடிக்கை எதுவும் உங்களிடம் ஏற்படாது என்பதையும் நான் நன்கறிவேன்.

Categories: ஏனையவை Tags:
Comments are closed.